பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் அன்னையின் சிவப்பேறு ... . 397. என்னால் ஒன்றுமே செய்ய இயலாது. சுடுகாடும் 2 பர்லாங் தொலைவில் இருந்ததால் எல்லாச் செயல்: களும் இனிதாக நிறைவேறின. தங்கத்தாலாகிய சில அரிசி களை சாதாரண அரிசியுடன் கலந்து வாய்க்கரிசி போட்டு குமாரர்கள் இருவரும் பார்த்துக்கொண்டிருக்க, சுதைக் குத் தீ மூட்டினேன். அப்போது பட்டினத்தார் அன்னையாருக்கு இறுதிக் கடன் இயற்றும்பொழுது பாடிய பாடல்கள் நினைவிற்கு வந்தன. முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாள்சுமந்தே அந்திபக லாச்சிவனை ஆதரித்துத்-தொந்தி சரியச் சுமந்துபெற்ற தாயார் தமக்கோ எரியத் தழல்மூட்டு வேன். - வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும் கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து-முட்டச் சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ விறகில்இட்டுத் தீமூட்டு வேன். அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு வரிசைஇட்டுப் பார்த்து மகிழாமல்-உருசிஉள்ள தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ - மானே என அழைத்த வாய்க்கு அள்ளிஇடுவது அரிசியோ தாய்தலைமேல் கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல்-மெள்ள முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன் மகனே எனஅழைத்த வாய்க்கு தாயின் பிரிவைத் தாங்கமாட்டாமல் முற்றும் துற்ந்த முனிவரே இவ்வாறு புலம்பி அழும்போது உலக வாழ்வில் தோய்ந்து கிடக்கும் எனக்கு உண்டான துக்கம் எவ்வளவு என்பதை எடுத்துக்கூறத்தேவை இல்லை. o காலையிலேயே ஒரு பத்து பேருக்கு பகலுண்வு தேவைப்படும் என்று ஆனந்தபவ்ன் விடுதியில் ஆள் மூலம் 1. பட்டினத்தார் பர்ட்ல்கள்.-399, 392-393, 394