பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 & நினைவுக் குமிழிகள்.: சொல்லி இருந்தேன். சுடுகாட்டிலிருந்து திரும்பின முக்திய மான உறவினர்களை இல்லத்தில் நீராடச்செய்து ஆனந்த பவனில் உணவு கொள்ளச் செய்து, ஊருக்கு அனுப்பி வைத்தேன். பெண்களுக்கு மட்டிலும் இல்லத்திலேயே உணவு தயாராகியது; உண்டு விடை பெற்றனர். மறுநாள் பால் தெளித்து சூடாற்றி எலும்புகளைப் பொறுக்கி மொந்தையில் வைத்து வீட்டின் புறத்தே பாதுகாப்பான இடத்தில் வைத்தேன். பத்தாம் நாள் கருமாதி. பலருக்குக் கடிதம் மூலம் தெரிவித்திருந்தேன்; சிலரே வந்திருந்தனர். பெரகம்பியிலிருந்து என் அம்மானும் தம் துணைவி யாருடன் வந்திருந்தார். என் மைத்துனர் முதல் மனைவி யும் வந்திருந்தாள். எதிர்பார்த்த பலர் வரவில்லை. அன்றே தீட்டு கழியவும் திதி வைக்கவும் ஏற்பாடு செய்து அனைத்தையும் முடித்தேன். திதி முடிந்து இரண்டு நாள் கழித்து நானும் என் அண்ணார் மு. கிருஷ்ணசாமி ரெட்டியாரும் (ஆலத்துடையாம்பட்டி) திருஅரங்கம் சென்று எலும்பைக்காவிரிவெள்ளப் பெருக்கில் கரைத்துத் திரும்பினோம். காசி யாத்திரைக்கு என்அன்னை யாரை அனுப்பலாம் என்று திட்டம்இட்டிருந்தேன். எதிர்பாராத நோயால் அது தடைப்பட்டது. அன்னையாருக்கு அப்பேறு இல்லை. என்செய்வது? மூன்றாண்டுப் பருவத்தில் தந்தையை இழந்தவன் யான். தந்தையொடு கல்விபோம்” என்று பெரியோர் கூறுவர். இந்நிலையில் பல இன்னல்கட்கு இடையே சிறிதும் தளராது அம்மையாக இருந்து என்னை வளர்த்தும், அம்மையும் அப்பனுமாக இருந்து எனக்கு எல்லா நலன்களை அருளியும் 42 வயது வரை என் வாழ்க்கையைக் கண்டு மகிழ்ந்திருந்த என் அன்னையின் பிரிவு இரு மடங்கு துக்கத்தைத் தந்தது. நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை யுடைத்திவ் அலகு." குறள்-888 (நிலையாமை)