பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்குடியில் பதவி விலகல் 415 தொழில் நடைபெறும் இடங்கள்; சென்னை, துரத்துக்குடி, கன்னியாகுமரி, இராமேசுவரம்-இது வரலாறு. சென்னை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, இராமேசுவரம் - இந்த இடங்களில் மீன் பிடிக்கும் தொழில் நடைபெறுகின்றது. -இது சமூக இயல். அந்தக் காலத்தில் வரலாற்றுப் பாடம் அரச பரம்பரையைப் பற்றிய பாடமாகவே அமைந்திருந்தது. ஆட்சியில் ஏற்பட்ட நன்மைகள் என்பதுபற்றி ஒரு சிறு பத்தியேஇருக்கும்.நாட்டில் ஏற்பட்ட கலைவளர்ச்சி, கல்வி வளர்ச்சி, சமயங்கள் வளர்ந்த வகை, பக்தி இயக்கத்தால் ஏற்பட்ட புரட்சி, தனித்தமிழ் இயக்கம், தமிழிசை வளர்ச்சி போன்ற செயல்கள் வரலாற்றுப் பாடத்தில் இடம் பெறவில்லை. விளைபொருள், கைத்தொழில்கள், ஆலைகள்-முதலிய விவரங்களும் இடம் பெறவில்லை. இவை யாவும் இணைந்து ஒருவாறு முழுமையாக்கப்பெற்ற பாடத்திட்டமே சமூக இயல் பற்றிய பாடத்திட்டம். பெரும்பான்மையான ஆசிரியர்கட்கு பொருளறிவு இல்லாததால், அவர்கட்கும் பயன்படும் வகையில் இவ்வரிசை நூல்களைச் சற்று விரிவாகவே எழுதி வெளியிட்டு அரிய கல்விப்பணியினை ஆற்றினார் திருவேங்கடாச்சாரி. நான் துறையூர் உயர்நிலைப்பள்ளி யில் பணியாற்றியபொழுது சமூக இயலைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் இவர் நூல்களையே விரும்பியதால் இவையே பல்லாண்டுகள் பாடநூல்களாக வைத்திருந்தோம். காரைக்குடியில் பணியாற்றிய காலத்தில் நான் எழுத்துப் பணியில் மும்முரமாக இறங்கிய காலத்தில் என். கைப்படியைக் கவனிப்பார். சில இடங்களில் திரு செய்வார்; நகாஸ் வேலைபோல் அது அமையு நேரங்களில் எல்லாம் கல்வி பற்றியே உரையர்டு அறிஞர்கள் கல்வி பற்றிக் கூறியுள்ள க் - போம். அவை வகுப்புறையில் பயன் பற்றிச் சிந்திப்போம். கல்வி :