உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எம்.ஏ. தேர்வு பெறல் - 25 இந்த ஆண்டு முழுதும் ஓயாத படிப்பு: ஆராய்ச்சித் திறன் வளர்ந்து வரும்போது நினைவுத் திறன் குறை கின்றதா? என்பது என் ஐயம், 1939-B.Sc. தேர்வு எழுதின போதும், 1941-L.T. தேர்வு எழுதினபோதும், 1944வித்துவான்-முதல் நிலை தேர்வு எழுதினபோதும், 1945 வித்துவான்-இறுதி நிலை எழுதினபோதும், 1947-B.A. தேர்வு எழுதினபோதும் இருந்து வந்த நினைவுத் திறன் 1951- M.A., தேர்வு எழுதினபோது குறைந்து விட்டதாக உனர்ந்தேன். எல்லோருக்கும் இந்நிலை உண்டா? என் உளவியல் அறிவுப்படி இஃது இன்னும் விளங்காத புதிராகவே உள்ளது. M.A. பயிலும்போது ஒவ்வொரு தாளுக்கும் குறிப்புகள் எழுதுவது வழக்கம். குறிப்புகளைப் படிக்கும்போது தெளிவு ஏற்படவில்லை. குறிப்புகளில் பாடல் எண்கள் குறிக்கப் பெற்றிருந்தமையால் மூலத்தை அடிக்கடிப் பார்க்க வேண்டியிருந்தமையால் நினைவுத் திறன் குறைந்ததோ என ஐயப்படுகின்றேன், இந்த ஐயம் இன்னும் தீர்ந்தபாடில்லை. B.Sc. படித்தபோது குறிப்பு களை வைத்திருந்தேன், அவை பெரும்பாலும் கணிதம், அறிவியல் பற்றியிருந்தமையால் எளிதாக நினைவு கூர முடித்தது. அப்போது உழைத்த உழைப்பைவிட அதிக மாகவே உழைத்தேன். அக்காலத்தில் பச்சையப்பன் கல்லூரி மட்டிலும் B.O.L (Holis)க்கு மட்டிலும் மாணவர் களை அனுப்பிக்கொண்டிருந்தது. பின்னர்தான் அப்பட் டத்தைக் கைவிட்டு B.A. (Hons), M.A. தேர்வுகளுக்காக மாற்றிக்கொண்டது. வேறு எங்கும் தமிழில் முதுகலை பயில்வதற்கு வாய்ப்பு இல்லை. ஆசிரியர்கள்தாம் விதி விலக்குபெற்று தேர்வு எழுதிப் பட்டங்கள் பெற்றுவந்தனர். நான் தேர்வு எழுதின ஆண்டு 10 பேர்களுக்குக் குறைவாகத் தான் தேர்வு எழுதினதாக அறிந்தேன். அரசு இதழில் (Gazette) எம்.ஏ.யில் தேர்ந்தவர்கள் ஏழெட்டு பேர்களின் பெயர்கள்தாம் அறிவிக்கப் பெற்றிருந்தன. - தேர்வு தொடங்கும் ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்னர் விடுப்பு வாங்கிக்கொண்டு திருச்சி சென்றேன். மாயூரம்