பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எம்.ஏ. தேர்வு பெறல் 37 கவனித்ததில் அலட்சியமாகத்தான் தேர்வு மண் திற்கு வந்து கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் அர்ைமனி தான் தேர்வு எழுதுவார்; அர்ைமனியானதும் வெளியில் சென்று விடுவார். இந்நேரத்திற்கு முன்னர் யாரையும் வெளியில் அனுப்புவதில்லை. இது தேர்வு பற்றிய விதி. தேர்வுகள் முடிந்த பிறகு என் அறைக்கு வந்தார். மாலை காஃபி நேரம் வரை இருந்ததாக நினைவு. தான் தேர்வு களைச் சரியாக எழுதவில்லை என்றும், இன்னும் இரண்டு நாட்களில் சென்னை செல்வதாகவும், தேர்வு முடிவுகள் தெரியும் வரை சென்னையில் தங்குவதாகவும் கூறினார். தேர்வுகளின் முடிவுகள் ஜூன் மாதம் வெளி வந்தன. நான் முதல் வகுப்பு எதிர்பார்த்தேன். இரண்டாம் வகுப்புதான் கிடைத்தது (பின்னர் மதிப்பெண்கள் வாங் கிப் பார்த்ததில் 1400க்கு 833 வந்திருந்ததை அறிந்: தேன்) தேர்வாளர்களின் கூட்டத்தில் 840 போட்டு முதல் வகுப்புக்குக் கொணர்ந்திருக்கலாம். அங்ங்னம் செய்யப் பெறவில்லை. ஆனால் சரியாக எழுதாத என் நண்பர். ஒவ்வொரு தாள் தேர்வு நடைபெற்ற பொழுது அரைமணி நேரத்தில் தேர்வு மண்டபத்தை விட்டு வெளி வந்தவர், முதல் வகுப்பில் தேர்ச்சியடைந்தவராக அறிவிக் கப்பெற்றது. இது அதிசயத்திலும் அதிசயமாக இருந்தது எனக்கு! 3 மணி நேரம் எழுத வேண்டிய தேர்வில் மணி நேரம் எழுதி விட்டு, தேர்வு மண்டபத்தை விட்டு வெளி வந்தவர் முதல் வகுப்பு பெற்றார்!. அவர்தான் தேர்வு முடிவுகள் தெரியும்வரை சென்னையில் தங்குவதாகச் சொல்லிச் சென்றாரே, எப்படி முதல் வகுப்பு பெறாமல் இருக்க முடியும்? அப்படி வராதிருந்தால் சென்னையில் தங்கியிருந்ததற்குப் பொருள் இல்லையே. எத்தனைத் தில்லுமுல்லுகள் நடந்தனவோ? யார் கண்டார்கள்? இவை இறைவனுக்குத்தான் வெளிச்சம்! வேலியே பயிரை மேய்ந்தால் என்ன பாதுகாப்பு இருக்கின்றது?