உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 நினைவுக் குமிழிகள்-3 பிறகு திருவேங்கடாச்சாரி கடிதங்களைத் தயார் செய் வார். சுருக்கமாகக் கூறினால் நிர்வாகப் பொறுப்பைத் திரு. மேனன் காலத்தில் திருவேங்கடாச்சாரியே கவனித்து வந்தார். திரு மேனன்போல் தாராளமாகச் சம உரிமை யுடன், சகோதரப் பேராசிரியர்களுடன் பழகுபவர்களைக் காண்டல் அரிது. சோம்பேறிகளும் பொறுப்பற்றவர்களும் கடமையுணர்வு இல்லாதவர்களும் இவர்கள் தலைமையில் பணியாற்ற நேர்ந்தால், இவருக்கு விரைவில் கெட்ட பெயர் வந்து விடும். இறையருளால் வள்ளல் அழகப்பர் திருவுள்ளப்படி எல்லோரும் திறமையுள்ளவர்களாக வந்து சேர்ந்தது கல்லூரியின் முன்னேற்றத்திற்கு வழியமைத்து விட்டது. எல்லோரும் கருத்து வேறுபாடு இன்றி நன்கு இணைந்து செயற்பட்டனர். திரு மேனன் என்னை 'ரெட்டியார்’ என்றே அழைப் பார். என்னைப்பற்றிப் பிறரிடம் குறிப்பிடும் ேப ா து Tamil Lexicon (தமிழ்ப் பேரகராதி) என்று செல்லமாகக் குறிப்பிடுவார். எனக்கு இது மகிழ்ச்சியைத் தருவதாக இருந்தது. நல்ல படிப்பாளி (Schola) என்று என்மீது நல்ல மதிப்பு வைத்திருந்தார். நான் வந்து சேர்ந்த போது என் படிப்பு போதாது எ ன் ற உணர்வைத் தந்தது. சைதைக் கல்லூரியில் எனக்குப் பேராசிரியராக இருந்த பேராசிரியர் குருசாமி ரெட்டியாரையும் பன் மொழிப்புலவர் திரு. வேங்கடராஜூலு ரெடடியாரையும் அடிக்கடி நினைத்துக் கொள்வேன். அவர்கள் எனக்குக் குறிக்கோள் மனிதர்களாக இருந்து வந்தனர். அவர்கள் மாதிரி பெயர் எடுக்க வேண்டும் என்று கடுமையாக உழைத்தேன். கல்வி பயிற்று முறைகள், ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கற்பிக்கும் முறைகள்பற்றிய நூல் கள், கல்வி உளவியல்பற்றிய பல்வேறு நல்ல நூல்கள் இவற்றையெல்லாம் அக்கறையுடனும் ஆர்வத்துடனும் பயின்று வந்தேன். சில அரிய கருத்துகளை கு றி ப் பேட்டில் பதிந்து வைத்துக் கொள்ளும் பழக்கத்தையும்