பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ல்லூரி நூலகப் பொறுப்பு 总岛 இடைவெளியிட்டு-இரண்டு பகுதிகளாகக் கட்டடங்கள் அமைந்தன. நெடுஞ்சாலையின் அருகில் கீழ்ப்புறம் ஒரு பெரிய மண்டபம்-அஸ்பெஸ்டாஸ் கூரை அமைந்ததுதயாராயிற்று. இதுதான் தற்காலிகமாக நான்கு ஆண்டுகள் விரிவுரை மண்டபமாகப் பயன்பட்டது. இதற்கு நேர்மேற்கில்-இடையில் கல்லூரிக்குள் நுழை யும் பிரதான வாயிலைக் கடந்து இதே மாதிரி இன் னொரு கட்டடமும் தயாராயிற்று, இதில் தற்காலிக மாக 40 பேர்களுக்குரிய கீழ்கோடியிலும் மேல்கோடியிலும் இரண்டு வகுப்பறைகள், இரண்டிற்கும்இடையே முதல்வருக் கான ஒர் அறை, அருகில் அலுவலக அறை, இன்னொரு சிறிய அறை, ஆகியவை தடுக்கப்பெற்றன. இரண்டு பகர வடிவான பகுதிகளில் மேல் புறமாக உள்ளதில் பலமான அடிப்படையில் அமைந்த பல கீற்றுக்கொட்டகைகளும், கீழ் புறம் உள்ள பகரவடிவான பகுதியில் ஒரு பெரிய கல் கட்டடமும், பல கீற்றுக்கொட்டகைகளும் போடப்பட்டன. கல் கட்டட வேலை நான்கு ஆண்டுகளில் நிறைவெய்தியது. கீழ்ப்புறமாக உள்ள பகரவடிவப் பகுதியில் வடபுறம் ஒரு சிறு அறையும் ஒரு வகுப்பறையும், கீழ்ப்புறம் வட கோடியில் ஒரு வகுப்பறையும், தென்கோடியில் ஒரு வகுப்பறையும் இவற்றிற்கிடையில் ஆசிரியர்க்கென நான்கு சிறிய அறைகளும் (மேற்குபுறம் இரண்டு; கிழக்குப் புறம் இரண்டுமாக) அமைந்தன. இதில் மேற்குப் புறமாக உள்ள ஒரு சிறிய அறை எனக்கு ஒதுக்கப் பெற்றது. இதில்தான் ஒன்பது ஆண்டுகள் தங்கி என் பணி களையும் கடமைகளையும் சிறந்த முறையில் ஆற்றி வந்தேன். மேல்புறமாகவுள்ள தற்காலிக நூலகம், அறிவியல் அறை, முதல்வர் அலுவலகம் இணைந்து ஒன்றாக அமைந்திருந்தன. பல சரக்குக் கடைபோல் அமைந்த இதில்தான் 4 ஆண்டுகள் காலம் தள்ள வேண்டி யிருந்தது. புத்தகங்கள்அடுக்கடுக்காய்க்குவிந்து கொண்டே வந்தன. 1955-இல் தான் புதிய கெட்டிக் கட்டடம்-கெட்டி யான கல் கட்டடம்-தயாரானது. தரை தளத்தில் மேற்குப் fi–3