பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-112 5. கல்லூரியில் இரண்டாம் ஆண்டு 1 95 t -பிப்பிரவரி மாதத்திலேயே கலைக் கல்லூரி: வளாகத்திலிருந்து சொந்தக் கட்டடத்தில் குடிபுகுந்தோம். கலைக்கல்லூரிக்குப் பேருந்தில் செல்லும் சில ஆசிரியர்கள் பயிற்சிக் கல்லூரியைக் கீற்றுக் கொட்டகைக் கல்லூரி என்று ஏளனமாகப் பேசிக் கொண்டு போகும் சொற்கள் சங்கள் காதில் விழாமல் இல்லை. இதனால் எங்கள் மனம் தளரவில்லை. அந்தக் கலைக்கல்லூரியில் கூட அறிவியல் பகுதிகளைத் தவிர ஏனைய துறைகள் யாவும் கீற்றுக் கொட்டகையில்தான் அடங்கியிருந்தன என்பதை அவர்கள் மறந்தனர் போலும். - அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும் மிகைமக்களான்மதிக்கற் பால - நயமுணராக் கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும் வையார் வடித்த நூலார். |அவமதிப்பு - தாழ்ந்த மதிப்பு : ஆன்ற - உயர்ந்த: மிகை மக்கள் - பெருமையுடைய மேன்மக்கள்; நயம் - நற்குணம் ; கை அறியா - நல்லொழுக் கத்தை அறியாத - இழிப்பு - அவமதிப்பு: - வையார்-மனத்தில் கொள்ளார்.1 என்ற நாலடியாரை நினைத்துக் கொண்டேன். இதில் சமண முனிவர் பெரியாரது மதிப்பின் சிறப்பையும், சிறியா ரது மதிப்பின் சிறப்பின்மையையும் கூறியுள்ளது சிந்திக்கத் தக்கது. - - வைணவர்கள் எவ்வளவு பெரிய மாளிகையில் வாழ்ந் தாலும் தம் இல்லத்தைக் குடில்’ என்றும், மிகச்சிறிய குடிசையில் இருந்தாலும் பிறரது இல்லத்தைத் *திருமாளிகை’ என்றும் சொல்விக் கொள்வது மரபாக സപ 1. நாலடியார்-163 (பெரியாரைப் பிழையாமை)