பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டி. கே. சி. பாடபேதங்கள் - 71 யும் சனகனிடம் அறிமுகப்படுத்துகின்றான். மூன்றாவது அடி. இராமன் மீது என் உயிர்மேல் வைத்திருக்கும் காதலைவிட அதிகமான காதலை வைத்துள்ளேன்’ என்ற கருத்தை வெளியிடுகின்றது. இங்ங்னம் ஒரு முனிவர் தம் அளப்பரிய அன்பையே விளம்பரப்படுத்திக் கொள்வதை ஒருவரும் ஒப்புக் கொள்ளார்; முற்றத் துறந்த முனிவருக்கு இஃது சிறிதும் அடுக்காது. அன்றியும், - காதல்என்றன் உயிர்மேலும் இக்கரியோன் பாலுண்டால் என்ற அடியில் ஒலிநயம் சிதைகின்றது; அது திசைமாறிச் செல்வது போன்ற உணர்வை நம்மிடம் உண்டாக்குவதை அறிய முடிகின்றது. இந்த மூன்றாவது அடியை அப்படியே மாற்றுகின்றார் டி.கே.சி. விசுவாமித்திரன் சனகனைப் பார்த்து நேரே அழைத்துப் பேசுவது போன்று அமைந்து விடுகின்றது. - . வேதம்என்ற உருவுடையாய்! மிதிலையர்தம் உயிர்அனையாய்! என்று இதில் சனகனை விசுவாமித்திரன் அழைத்துப் பேசு வதில் அற்புதமான பொருத்தம் அமைந்து விடுகின்றது. ஒலி நயமும்கூட அற்புதமாக அமைந்து விடுகின்றது புதிய திருத்தத்தில். இப்போது பாட்டின் முழு உருவம், கோதமன்தன் பன்னிக்(கு) முன்னை உருக் கொடுத்த(து), இவன் போதுவென்ற தெனப்பொலிந்த பொலன் கழற்கால் பொடிகண்டாய் வேதம் என்ற உருவுடையாய்! மிதிலையர்தம் உயிர் அனையாய்! ஈ(து) இவன்தன் வரலாறும் புயவலியும் எனஉரைத்தான்.