பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 நினைவுக் குமிழிகள்-3

என்று அமைந்து விடுகின்றது. இதுதான் டி.கே.சி.பதிப்பிலுள்ள பாடல். இப்போது இதைப் பன்முறை படித்து அநுபவித்தால் திருத்தத்தின் பெருமையை அறிய முடியும். 2. இன்னோர் எடுத்துக்காட்டு. இராமனுக்கு முடிசூட்டு விழா நடைபெறப் போகின்றது என்பதை வருணிக்கின்றார் கம்பர் பெருமான்.

        மாதர்கள் கற்பின் மிக்கார்
            கோசலை மனத்தை ஒத்தார் 
        வேதியர் வசிட்டன் ஒத்தார்
            வேறுள மகளிர் எல்லாம் 
        சீதையை ஒத்தார் அன்னாள்
            திருவினை ஒத்தாள்; அவ்வூர்
        சாதன மாந்தர் எல்லாம்
            தயரதன் தன்னை யொத்தார். 

என்பது பழைய படிகளில் உள்ள ஒருபாடல். 'மாதர்கள் கற்பின் மிக்கார்’ என்று முதலடியில் கூறியவர் இரண்டாம் அடியில், 'வேறுள மகளிர் எல்லாம்' என்றுசொன்னால் எந்த மகளிரைக் குறிக்கும் என்ற வினா எழுதல் இயற்கை. அயோத்தி மாநகரில் உள்ள பெண்களை கற்புடைய மாதர்," மற்ற மாதர்” என்று கம்பர் பாகுபாடு செய்வாரா? இஃது எவ்வளவு அசம்பாவிதமாக அமைகின்றது? இதைத் தவிர்க்கவே டி.கே.சி.


         மாதர்கள் வயதின் மிக்கார்
             கோசலை மனத்தை ஒத்தார்: 
         வேதியர் வசிட்டன் ஒத்தார்
             வேறுள மகளிர் எல்லாம் 
         சீதையை ஒத்தார்; அன்னாள்
             திருவினை ஒத்தாள்: அவ்வூர் 
         சாதன மாந்தர் எல்லாம்
             தயரதன் தன்னை ஒத்தார்