பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

": { நினைவுக் குமிழிகள்-3 ஒப்பதே முன்பு, மற்று அவ் வாசகம் உணர்ந்த பின்னர் அப்பொழு(து) அலர்ந்த செந்தா மரையினை வென்ற(து) அம்மா! என்பது திருத்தம் பெற்ற பிறகு உள்ள பாடல். இந்தத் திருத்தத்தில் என்ன குறை? திருத்தங்கள் மிகவும் இனிமையாக இருப்பதுடன் பொருளையும் எளிதாக, அருமையாக, விளக்குகின்றதல்லவா? இத்தகைய திருத்தங்களால் கம்பர் எப்படி எழுதி இருப்பார்? என்பதைக் கண்டு பிடிக்கின்றார் டி.கே.சி. மற்ற பாடல்கள் : 1. கவிதைகளில் கானும் சுளுக்கை எடுக்கும் கைங்கரியம் வேறு பாடல்களிலும், தொடருகின்றது. கருப்பூரம் காறுமோ? (நாச் , திரு. 7:1). என்ற ஆண்டாள் பாசுரம். திவ்வியப் பிரபந்தத்தில், கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ? திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ? மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே! என்று அச்சுவடிவம் கொண்டுள்ளது. நாற்றம் என்பது நல்ல சொல்தான்; மோனையைக் கருதி மூன்றாவது அடியில் வாயமுதும் வாசமும் என்று திருத்தி அமைக்கப் படுகின்றது. இத்திருத்தம் பாகரத்தின் வடிவத்தில் பெரிய மாற்றம் செய்யாவிடினும் பாசுரத்தின் ஒலி நயத்தை அழகாக அமைக்கின்றது.