பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

烹翼 எனக்குக் கிடைக்காமல் செய்தான். என்னைத் தவிர வேறு எவரும் பத்து ஆண்டுகள் இன்னல்களைப் பொறுக்க முடியாது நழுவிப் போவர் எனபது என் கருத்து. அப்போது நிலவிய சூழ்நிலைகளை ஆராய்ந்தால் இது எளிதில் புலனாகும். நான் இல்லை எனில் திருப்பதியில் பல்கலைக் கழக மட்டத்தில் தமிழ் இல்லை’ என்பது ஏழுமலையான் திருவுளப் பாங்காகும் என்ற நிலையை உருவாக்கினவன் அந்த பைந்தமிழ்ப் பின் சென்ற பசுங் கொண்டலாகும்.என் திருப்பதி வாழ்வின் இந்த வரலாறே முக்கியமாகக் குமிழிகளின் நான்காம் பகுதியாக இலக்கிய வடிவம் பெறுகின்றது. திருப்பதி வாழ்வில் யான் சந்தித்த இன்னல்கள், இக்கட்டுகள், நண்பர்களாக இருந்து குடிலர்களாகவும் கட்டியங்காரர்களாகவும் இருந்து கொண்டு விளைவித்த சதிகள் என்னிடம் சுயநலம் மருந்துக்குக் கூடக் கிடைக்கா மையால் அவை ஆதவனைக்கண்ட பணிபோல் விலகின மையைச் சிந்திக்கும்போது, புண்ணிலே புகுந்த கோல்எனத் துயரம் புகுந்தெனைக் கலக்கிய போதும் கண்ணிலே எனது கருத்திலே கலந்த கருத்தனே நின்றனை அல்லால் மண்ணிலே வயங்கும் வானிலே பிறரை மதித்திலேன் மதிக்கின்றார் தமையும் நண்ணிலேன் வேறொன் றெண்ணிலேன் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே’ என்ற வடலூர் வள்ளலாரின் பாடலை என் நா நவிற்றி என்னையும் மறக்கச் செய்தது. ஒரு சில நாளில் (செப்டம்பர்-1969 என்பதாக நினைவு.) ஏழுமலையான் திருவருளால் தமிழக அரசின் ஆண்டுதோறும் ரூ 100001 5. திருஅருட்பா-ஆறாந் திருமுறை. அபயத்திறன்-5 (3.557)