பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 நினைவுக் குமிழிகள்-4 சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பாரேயன்றி துறை வளர்ச்சிக்குப் பாடுபடமாட்டார் என்று துணைவேந்தர் கருதியிருக்க வேண்டும். துணைவேந்தரின் கருத்தை யார் அறிய முடியும்? ஏழுமலையான்தான் அறிவான். திரு நாயக்கருக்கு இக்காரணத்தால் கிடைக்கவில்லையேயன்றி, துணைவேந்தர் கருணையற்றவர் என்பதில்லை. எனக்கு ஆணை பிறப்பித்ததும் உள்ளூர் ஆட்சிக் குழு உறுப்பினர் களைச் சந்தித்து ஏதாவது உளறிக் கொட்டியிருக்க வேண்டும். இந்த உளறலிலிருந்துதான் மேற்குறிப்பிட்ட வதந்தி கிளம்பியிருக்க வேண்டும். நான் திருப்பதி சென்றதும் ஒன்றிரண்டு நாட்களில், வீடுதேடி திரு. நாயக்கரைச் சந்திக்க முயன்றேன்; வெளியூர் சென்றிருப்பதாக அறிந்தேன். அவர் துணைவியாரிடம் என் முகவரியைத் தந்து வந்தேன். ஒன்றிரண்டு நாட்களில் அவரே வந்து என்னைச் சந்தித்துப் பேசினார். பின்னர் என்ன ஆனார்? எங்குச் சென்றார்? என்பதை என்னால் அறியக் கூடவில்லை. அவரைப் பார்த்து அளவளாவ வேண்டும் என்ற ஆசை இருந்து வருகின்றது. முகவரி தெரியவில்லை. சென்னையில் (1983) டிசம்பரில் நடை பெற்ற வைணவமாநாட்டு நிகழ்ச்சி நிரலில் அவர் பெயர் காணப்பட்டது. சந்திக்கலாம் என்று மாநாட்டிற்குச் சென்றேன். ஆனால் அவர் வரவில்லை; ஏமாந்தேன். வைணவ சங்கச் செயலாளர் திரு. என். வேணுகோபால் நாயக்கர் மூலம் அவர் காஞ்சியில் இருப்பதாக அறிந்தேன். இறையருளால் சந்திப்பு ஏற்படும் எனக் கருது கின்றேன். அடுத்த ஆண்டில் (1984) வைணவமாநாட்டில் பங்கு பெற்றிருந்தார். அளவளாவி மகிழ்ந்தேன்.