பக்கம்:நினைவுச்சரம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4 நினைவுச்

பட்ட ஊரு? அது காலுலே கட்டி அடிக்க முடியுமா மத்த ஊருகளே ஆமா. மதினியை கூட்டிக்கிட்டு வரலியா??

சூரியன் பிள்ளையின் பார்வை சுற்றிச் சுழன்றது.

இல்லே. நான் மட்டும் தான் வந்திருக்கேன்'.

'என் அண்ணுச்சி அப்படி? அப்போ இங்கேயே தங்குற உத்தேசம் இல்லேயா??

‘இன்னும் ஒண்னும் தீர்மானம் ஆகலே. அவளுக்கு மதுரை புடிச்சுப் போச்சு. எனக்கு என்னவோ மனசு போட்டு அடிச்சுக்கிட்டேயிருந்தது. சொந்த ஊரு, வீடு வாசல், சின்ன வயதிலே பழகின ஜனங்கள், சொந்தக்காரங்க-இப்படிப் பல ஏகப்பட்ட இதுகளேயும், சாகிறதுக்கு முன்னுடி ஒரு தரமாவது பாத்துப் போடனும்கிற ஆசை. அந்த நெனேப்பே ராவும் பகலும் மனசிலே கிடந்து குடையது. சரி, போயி, பார்த்திட வேண்டியது தான்னு கிளம்பி வந்துட்டேன். அவளுக்கா நெனப்பு வந்து மீனுட்சி இங்கே வந்தா வாரு; இல்லே, மகனுேடு மதுரையிலேயே இருக்கிறதா இருந்தா இருந்துட்டுப் போரு. அப்ப கட்டி வச்ச வீடு இது. நான் உசிரோடு இருக்கிற வரைக்கும் இதை விற்க விலேச் சாட்டப்படாதுங்கிற வைாக்கியம் எனக்கு. நம்மாலே ஒரு சின்ன வீடு கூடக் கட்ட முடியாது; ஒரு துண்டு நிலம் கூட வாங்க முடியாது. அப்பா வாங்கி வச்ச மூணு வயல்களையும் விற்கவேபடாதுன்னு ஒரு அடம். எவ்வளவோ சிரமங்கள் வந்தது. சோதனைகள் குறுக்கிட்டுது. கண்டப்பிடி, குலேப்பிடியா எவ்வளவு நெருக் கடிகள்! வீட்டை மட்டும் வச்சுக்கிட்டு, வயல்களே கைமாறிப் போடலாமான்னு கூட யோசிச்சதுண்டு. ஒரு தடவையா, ரெண்டு தடவையா! அடம் ஊகுங். அப்புறம் என்னடா யிருக்கு, ஊர்க்காரனுக அடத்தம்பி, அடத்தம்பின்னு குறிப்பிடு வானுகளே, அந்தப் பேரை கடைசிவரை நிலைநாட்டிர வேண்டாமான்னு ஒரு மனஉறுதியோடு தாக்குப் புடிச்சேன். வைராக்கியமா உழைச்சேன். ஒரு மாதிரியா சமாளிச்சு தலே நிமிர்ந்திட்டேன். தலை நிமிர்ந்தாச்சுவே தம்பியாபுள்ளே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/14&oldid=589255" இலிருந்து மீள்விக்கப்பட்டது