பக்கம்:நினைவுச்சரம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 நினை வுச்

ஒரு தெரு சோக நாடகம் என்ருல், இப்படி ஆட்களே இல்லாமல் போய், சிதைந்து சீரழியும் நிலையில் காணப்படுகிற சிற்றுர் மாபெரும் சோக நாவல் இல்லேயா? இப்படி என் மனம் அடிக்கடி கேட்டுக்கொள்ளும். இதுக்கெல்லாம் நாம என்ன பண்ணமுடியும் அண்ணுச்சி ? காலத்தின் கோரக் கைகள் அழுத்தமாகக் கீறிவிடுகிற கொடுமையான காயங்கள் இதெல்லாம் :: -

தனது இலக்கிய ஈடுபாட்டையும் பேச்சாற்றலேயும் 'அம்பலப்படுத்த அருமையான வாய்ப்பு கிட்டியதைக் குறித்து ரொம்ப திருப்தி அவருக்கு. ஆனல் மயிலேறும் பெருமாள் பிள்ளேயின் இதயத்தை சோகம் அழுத்தவே, அவர் மெளனப்பிள்ளையார் ஆகத்தான் இருக்கமுடிந்தது அவ்

சிவபுரம் பத்தரைமாத்துகள் கடன்வாங்கிக் காலம் ஒட்டவேண்டிய நிலையில் இருந்தபோதிலும் ஜம்பத்தை விட்டு விடுவதில்லே. பரஸ்பரம் ஒரு வீட்டாரை அடுத்தக் குடும்பத் தினர் கேவலமாக மதிப்பிட்டுப் பேசுவதையும் விட்டுவிடுவ தில்லே.

இப்போ மேல்மீனுக்காத்தான் இருக்காரு. பெரியவரு செத்தால் தெரியும் குடும்ப நிலைமை. ஏகப்பட்ட கடன் இருக்கு!’ என்று ஒவ்வொரு குடும்பமும் இதர குடும்பத்தாரைப் பற்றி வக்கண கொழிக்கும். - - -

அதே சமயத்தில் தங்கள் குடும்பக் கடனப்பற்றி யாரா வது குறிப்பிட்டுவிட்டால், பேசுகிற குடும்பத்தாருக்குக் கோபம் மூக்குக்குமேலே வந்துவிடும். கடன் என்ன கடன், பிரமாதக் கடன் : இந்தக் காலத்திலே எவன் ஐயா கடன் வாங்காம வாழ்க்கை நடத்துருன்? ஆனைப்பட்ட அரசாங்கமே கடன், கடனுக்கு மேலே கடன்னு, கடன்கள் வாங்கியேதான் காலம் ஒட்டுது. அப்புறம் நாம கடன் வாங்குறதிலே என்ன குறைச்சல் மயிரு வந்துட்டதாம்? என்று குடும்பத் தலை வரோ, தலைவியோ சீற்றம் காட்டுவதும் மனித சுபாவமாகவே இருந்தது. - ..

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/180&oldid=589435" இலிருந்து மீள்விக்கப்பட்டது