பக்கம்:நினைவுச்சரம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#86 நினைவுச்

வப்புத்துணியை கட்டிவைத்திருந்தார்கள். அதுதான்

ஆர்ச்?. கல்யாண வீட்டுப் பந்தலும் அதுவேதான். அதன் கம்பங்களில், பக்கத்துக்கு ஒன்ருக, வாழை மரம் குலேயோடு கட்டப்பட்டிருந்தது.

உள்ளே, வீட்டு வாசலில் ஒரு தட்டுப்பந்தல்’. ஸிம்ப் பிளா முடிந்தது விஷயம்.

இப்போது இவ்வூரின் எல்லாக் கல்யாண வீடுகளிலும் இப்படித்தான் நடைபெறுகிறது என்று மன. பென. தெரிந்து கொண்டார். -

அந்தக் காலத்திலே இப்படியா !” என்று பரிகாசமாகச் சிரித்தது அவர் மனம்.

- பெரிசா கொட்டகைப்பந்தல் போடுவார்கள். அதுக் குள்ளே பாத்தி’ கிணறு என்று அலங்கார வேலைப்பாடு பிரமாதமாக இருக்கும். ஒவ்வொரு பாத்தி (சதுரம்), கிணறு (வட்டம்) மத்தியிலும் லஸ்தர் விளக்கு தொங்க விடப்பட்டிருக்கும். அடுக்கடுக்காக, வட்ட வளையங்களிலே, பூக்கிண்ணங்கள் மாதிரி, கண்ணுடி லோட்டாக்கள் மாதிரி, வெள்ளேயிலும் கலர்களிலும் கண்ணுடி அமைப்புகள். அதுக் குள்ளே மெழுகுவத்திகள் வச்சு எரியவிடுவாங்க. வளையங் களிலே, விதம் விதமான அமைப்புகளில் கண்ணுடிக் குண்டு கள், குமிழ்கள், நீள வடிவங்கள், சரம் சரமாத் தொங்கும். பார்ப்பதற்கே வசீகரமாக இருக்கும். அப்புறம், ரொம்பப் பெரிசாக ஊதப்பட்ட பலூன்கள் மாதிரி, தடித்தடி ஃபுட் பால்கள்? மாதிரியான ரசகுண்டு கள் மினுமினுன்னு தொங்க விடப்பட்டிருக்கும், பந்தலிலே. இதுகளும் ரகம்ரகமான கலர் களில் இருக்கும். வெளியே, தெருவை மறிச்சு அம்பாரிப் பந்தல்’. அதன் நாலு கால்களிலும் வாழைமரங்கள். கொட்டகைப் பந்தல்? போடாத வீடுகளில்கூட, பெரிசா, சாதாரணப் பந்தலாக இருந்தாலும் எடுப்பாகத்தான் இருக் கும். இதுமாதிரி ஒப்பேத்து வியாபாாம்? சமீப காலத்திலே தான் வந்து சேர்ந்திருக்கு !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/186&oldid=589443" இலிருந்து மீள்விக்கப்பட்டது