பக்கம்:நினைவுச்சரம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 நினைவுச்

செம்பகத்துக்கு பன்னெண்டு வயசானதும், பொன் னம்மா அதுக்கு சமையல் வேலே கத்துக் கொடுத்து, வீட்டு வேலைகளைச் செய்யும்படி கார்வாரு பண்ண ஆரம்பிச்சிட்டா. அதும் எல்லா வேலைகளையும் செய்துது. அப்படி డొమిఙr செய்ததே ஒரு தேகப்பயிற்சியாக அமைய, நல்ல சாப்பாடும்: கவலையத்து விளையாடிச் சிரிக்கிற வசதியும் சேர்ந்து புள்ளே அருமையா வளர்ந்துது. பெண் வளர்த்தியோ பேய் வளர்த் தியோ என்ப.க. அப்படித்தான் இருந்தது செம்பகத்துக்கு உடல் வளர்த்தியும். பதிமூணு வயசில்ே செம்பகம் தளதள மினுமினுன்னு-குளுகுளுன்னு வளர்ந்த பயிறு மத்தியிலே செழித்து ஓங்கி வனப்பா நிக்கிற மூப்பன் கதிருமாதிரிஜோரா இருந்தா. அப்பவும் என்கிட்டே சகஜமாப் பேசிச் சிரிச்சு விளையாடிக்கிட்டுத்தான் இருந்து.

அதைேட அந்த சுபாவத்திலேதான் வினையே வந்தது.

அப்போ செம்பகத்துக்கு பதிலுை வயசு வரலே. இன்னும் ரெண்டு முனு மாசத்திலே பதிமூனு வயசு முடியப் போகுது; எந்த நேரத்திலும் அவ பெரிய மனுவி ஆயிருவா, செலவுதான் காத்திருக்குன்னு பொன்னம்மா அடிக்கடி புலம் பிக்கிட்டிருந்தா. அது நல்ல ஞாபகமிருக்கு.

ஒருநாள், பகல் நேரம்தான். மத்தியானம் ரெண்டரை மூது மணி இருக்கும். நான் வெளியே எங்கெயோ போயிட்டு வந்தேன். பொன்னம்மா அடுக்களேயிலே தோசைக்கு அரைச்சுக்கிட்டிருந்தா. வெளி வாசல் கதவை நான் சாத் தலே. அது எப்பவும் திறந்தேதான் கிடக்கும். செம்பகமும் ரெண்டு மூணு புள்ளேகளும் ஒடி ஒளிஞ்சு தொட்டுப் புடிச்சு விளையாடுத விளையாட்டு ஆடிக்கிட்டிருந்திருக்கும் போலே. மத்தப் புள்ளேகளே காணுேம். செம்பகம் ஒரு அறையிலே கதவுக்குப் பின்னலே பதுங்கி நின்னிருக்கு. அது எனக்குத் தெரியாது. கதவு சரியா சாத்தப்படாமலும் விரியத் திறந்து வைக்கப்படாமலும் ஒஞ்சரிச்சு இருந்ததுேைல, அதை சுவரோடு படும்படியா நல்லத் திறந்து வைக்கலாமேன்னு கதவை புடிச்சேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/212&oldid=589471" இலிருந்து மீள்விக்கப்பட்டது