பக்கம்:நினைவுச்சரம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 235

கட்டைப் பூசைப்படாமல் தப்பினது; அதுக்குப் பழிவாங்க இப்படி எல்லாம் நாரதவேலே பண்ணிக்கிட்டிருப்பது-இது களை எந்த உண்மைவிளம்பி ஊராருக்கு எடுத்துச் சொல்வ தாம் ??

பெரியபிள்ளை ஆத்திரமோ படபடப்போ இல்லாமல் நிதானமாகப் பேசி, ஏகத்தாளமாகக் கேட்டு நிறுத்தவும், உள்ளத்தில் கோழையான சூரியன் பிள்ளை வெலவெலத்துப் போனர். பேசாமல் தலையை குனிந்தபடி கொஞ்சநேரம் உட்கார்ந்திருந்தார். பிறகு எழுந்து நழுவலானர்.

ஐயா சுகவாசி சூரியன் பிள்ளே ! இந்தக் கேவலமான தொழில் இன்ருேடு விட்டுவிடுமய்யா. சாகிறவரை மொட்டை எழுதும் உண்மைவிளம்பியாக இருக்கவேண்டாம். நானேயக் கல்யாணத்துக்கும் தாம்பூலத்துக்கும் மத்தியானச் சாப்பாட் டுக்கும் வந்திரும் வேய் என்று ஓங்கிய குரலில் மன. பென. பேசியது அவரை துரத்திச் செல்வதுபோல் ஒலித்தது.

இதை சாக்கிட்டாவது வந்தியே. கல்யாணத்தை நடத்தி வச்சிட்டுப்போ மீனுட்சி. நம்ம சுந்தரத்துக்கும் செம்பகம் மகள் மயிலுக்கும் கல்யாணம். இந்த வீட்டிலே நடக்கப்போகிற முதல் கல்யாணம் அதுதான் என்று பிள்ளே மகிச்சியோடு தெரிவித்தார்.

  • யாரு அந்தச் செம்பகம்?’ என்று அவள் விசாரித்தாள்.

இன்று சாத்திரி வந்துவிடுவா, நீயே பார்த்துக்கோ. நீ கேட்கவேண்டிய கேள்விகளே எல்லாம் அவளிடமே கேளு ? என்று சொல்லிவிட்டு, அவர் வேறு அலுவல்களில் ஈடு பட்டார்.

செண்பகமும் மயிலும் இரவில் வந்து சேர்ந்தார்கள்.

அவர்கள் வந்த உடனேயே, செம்பகம், இததான் தான் மீனுட்சி. உண்மைவிளம்பி சூரியன் பிள்ளே என்னையும் உன்னேயும் முடிச்சுப்போட்டு என்னவோ எழுதினனும்: உண்மையை கண்டுபிடிக்க மதுரையில்ேயிருந்து வந்திருக்கா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/235&oldid=589494" இலிருந்து மீள்விக்கப்பட்டது