பக்கம்:நினைவுச்சரம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{}{} நினைவுச்

மதுரை மாதிரிப் பெரிய டவுணிலே இப்படி தனியா வாழ்றது ஆபத்து என்று சொல்லி, கணபதியா பிள்ளேயே அவருக்கு தூரத்து உறவான-வசதி இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்த-ஒரு அம்மாளின் மகள் மீட்ைசியை மயிலேறுக்குக் கல்யாணம் முடித்து, தனக்குச் சொந்தமான ஒரு சிறு வீட்டில் குடியிருக்கச் செய்தார். அவனுடைய கல்யாணத்துக்கு சிவபுரத்திலிருந்து நாறும்பூநாத பிள்ளையும் வந்திருந்தார்.

  • உன் வீடு பத்திரமாயிருக்கு. வருசம் தோறும் வெள்ளே படிப்புக்குக் குறைவில்லே. நெல்லு வித்த பணத்தை பாங்கி யிலே போட்டு வச்சிருக்கேன். உனக்கு வருங்காலத்திலே தல்லபடியா அது உதவும் என்று அவர் சொன்னர்.

அவனே வாழ்த்திவிட்டு, கணபதியாபிள்ளையிடம் இவனே இன்னும் நல்ல நிலேமைக்குக் கொண்டுவர வேண்டியது உங்க பொறுப்பு என்று சொல்லி, விடை பெற்று வந்தார்.

பணம் கொஞ்சம் கணிசமாகச் சேர்ந்ததும் அதை வெள் ளிக்கடையிலே முடக்கும்படி நாரம்பு மாமா கணபதியா பிள்ளேக்கு அனுப்பிவைத்தார். இப்படி சிறுகச் சிறுகப் பணம் போட்டு, மயிலேறும் பெருமாள்பிள்ளே வேல்முருக விலாசம் வெள்ளிபாத்திரக் கடைசியில் ஒரு பங்குதாரராகிவிடக் காலம் துணேபுரிந்தது. -

கால ஒட்டம் எவ்வளவோ மாறுதல்களே கொண்டு சேர்த் தது. கணபதியாபிள்ளை பக்கவாத நோயினுல் படுத்த படுக்கையானர். கடையை கவனிக்க அவரிடம் மகன்கள் இல்லே. அவருக்கு இரண்டு மகள்கள்தான். இரண்டும் சிறு சுகள். கடையை நீரே எடுத்து நடத்த முடியும்ன நடத்தும். இல்லேன்னக்க, வித்துபோ டுவோம். நீரு நடத்துறதாயிருந்தா, எனக்கு இவ்வளவு ரூபா தந்தால் போதும் என்று கணபதியா பிள்ளே மன. பென.விடம் சொன்னர்.

கணக்குப்பிள்ளே ஆனதுமே மயிலேறு மன. பென. ஆகியிருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/60&oldid=589304" இலிருந்து மீள்விக்கப்பட்டது