பக்கம்:நினைவுச்சரம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 73

ஹேண்டிகிராப்ட்ஸ் எம்போரியம்னு பெரிய ஊர்களிலே இருக்குதே, அதுகளுக்கு உள்ளேபோய் நான் பாக்கிறது உண்டு. சும்மாதான். வாங்கவா, மாத்தவா! அங்கே பெரிய பெரிய குத்து விளக்குகளே வச்சிருக்காங்க. விலே இருநூந் தம்பது, முந்நூறு, நானூறுன்னு எழுதித் தொங்கவிட்டிருக் காங்க. ஒரு விளக்குகூட லட்சுமிகரமா, எடுப்பா, இந்த விலைக்குத் தகும் என்று சொல்லும்படியாக இல்லே. ஆளு, வெறும் இருபத்தஞ்சு ரூபாய்க்கு வாங்கியதாகச் சொல்லப் படுகிற இந்த விளக்கு இருக்கே, இதிலே விலை ஐநூறு ரூபாய்னு இப்போ எழுதித் தொங்கவிட்டு, ஹேண்டிகிராப்ட்ஸ் எம்போரியம் எதிலாவது சும்மஞச்சியும் வச்சால், ஆகா, இந்த விளக்குக்கு இவ்வளவு ரூபாய் தகும் என்றுதான் இதை பார்க்கிறவங்க சொல்லுவாங்க. இது வெறும் ஹேண்டிகிராப்ட் இல்லே, அண்ணுச்சி, கலே வேலைப்பாடு. ஆர்ட் ஒர்க். இதை செய்திருக்கிற ஆசாரியின் கைவேலையோடு அவைேட ஆத்ம திருப்தியும் இதிலே இனஞ்சிருக்கு. அதனுலேதான் இது இவ்வளவு அற்புதமா, எடுப்பா விளங்குது. நீங்க சொன்னது சரி அண்ணுச்சி. குளுமையான ஒளியோடு, குங்குமப் பொட் டோடு, குண்டுமல்லிச் சரத்தோடு நிக்கிற இந்த விளக்கு கண் நிறைஞ்ச கட்டழகுக் குமரி மாதிரியேதான் காட்சி தருது? என்று ரசித்து வியந்து அளந்தார் பட்டு லேஞ்சி பால் வண்ணம் பிள்ளை. x

இவர் சிவபுரத்தார்களில் ஒரு தனி டைப். எப்பவும் பட்டு லேஞ்சியை (வெண்பட்டு) வல்லாட்டாகப் பேர்ட்டுத் திரிவார். அதல்ை இவருக்கு பட்டுலேஞ்சி என்ற பெயர் நிலைபெற்று விட்டது. ஊர் ஊராகச் சுற்றித் திரிவதில் ஒரு ஆர்வம். அரசியல், பொருளாதாரம், இலக்கியம், கலை என்று பல விஷயங்களிலும், பத்திரிகைகள் புத்தகங்கள் மூலமும் பிரசங்கி கள் வாயிலாகவும் வெவ்வேறு நபர்களிடம் பேசிப் பழகியும், கொஞ்சம் கொஞ்சம் தெரிந்து வைத்திருந்தார். அவை சம்பந்தமான சொற்களே, எண்ணங்களே அடிக்கடி பேச்சிலே கலந்து, எல்லாம் தெரிந்தவர் என்று காட்டிக்கொள்வதில் அவருக்கு ஒரு திருப்தி; தன்னிப் பெருமை.

کوسلواس-108 سنويا

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/73&oldid=589317" இலிருந்து மீள்விக்கப்பட்டது