பக்கம்:நினைவுச்சரம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் 8i

பேர். நான் பாளையங்கோட்டையிலே படிச்சுக்கிட்டிருந்த போது கவனிச்சிருக்கேன் அண்ணுச்சி. ராத்திரி பூராவும் முழிச்சிருந்து சீட்டாடுற கோஷ்டி, தெரு விளக்கை எடுத்துக் .கிட்டுப் போயி தங்கள் வேலைக்கு உபயோகிச்சு வந்தது. சில பேர் தெரு விளக்கிலே உள்ள மண் எண்ணெய்யை தங்கள் விளக்குக்கு மாற்றிக்கிட்டாங்க. அப்படி சுலபமாத் திறந்து எண்ணெய்யை ஊத்திக்கிட முடியாதபடி விளக்கிலேயே ஏதோ டிரிக்ஸ் பண்ணிப் பார்த்துது முனிசிபாலிட்டி. அதுக்கும் பொறகு தான் விளக்கையே எடுத்துக்கிட்டுப் போகிற வேலையை ஆரம்பிச்சாங்க் புண்ணியவான்க. ஒன்பதரை மணிக்கு மேலே லேட்டை எடுத்திட்டுப் போயி, சீட்டு விளேயாடுவாங்க. வடுவூர் துரைசாமி அய்யங்கார் நாவல், ரங்கராஜு நாவல், ஆரணி குப்புசாமி முதலியார் எழுதின நாவல்னு எதையாவது லேபிரரியிலேயிருந்து எடுத்து வந்து வாசிப்ப்ாங்க. கூட்டமா, வட்டமிட்டு உட்கார்ந்து-ஒரு ரூமுக்குள்ளே தான்-நடுவிலே இந்த விளக்கை வச்சு, அந்த வெளிச்சத்திலே சத்தம் போட்டு வாசிப்பாங்க. ஒருத்தர் மாத்தி ஒருத்தர்னு டர்ன் வச்சு வாசிப்பாங்க. அலுத்துப் போயிரப்படாதுல்லே! இதைவிட ஒரு விசேஷம் என்னன்னு, ஒரு காலேஜ் ஸ்டுடன்ட் இருந்தான். தினம் தெருவிளக்கை குமுக்கு எடுத்துட்டு வந்துதான் தன் படிப்பை நடத்துவான். ஐயா, முன் காலத்திலே முத்துசாமி அய்யர்னு ஒருத்தர் தெரு விளக்கிலே உட்கார்ந்து ப்டிச்சுப் பாஸ் பண்ணி, பெரிய வராகி, ஜட்ஜ் ஆக உயர்ந்து விட்டார். அவர் அடிச்சுவட்டிலே நான் செயல் புரிகிறேன். நானும் தெரு விளக்கிலே படிக் கிறேன். அவர் தெகுவில் லாந்தக் கம்பத்தின் அடியில் அமர்ந்து படித்தார். நான் காலத்துக்கு ஏற்றபடி, தெரு விளக்கை ரூமுக்குள் கொண்டு வந்து மேஜைமீது வைத்து, நாற்காலியில் உட்கார்ந்து படிக்கிறேன். அதல்ை என்ன? தெரு விளக்கு தரக்கூடிய வெளிச்சம் எல்லாக் காலத்திலும் ஒரே மாதிரித்தான் இருக்கும் என்று லெக்சரடிப்பான்’ என்று விவரித்தார். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/81&oldid=589325" இலிருந்து மீள்விக்கப்பட்டது