பக்கம்:நினைவுச்சரம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவுச் சரம்

மறுபடியும் சிவபுரம் வந்து சேர்ந்துவிட்டதில் மயிலேறும் பெருமாள் பிள்ளைக்கு ரொம்பவும் சந்தோஷம்,

இருப்பது இயல்பு தானே எப்பேர்ப்பட்ட வருகை இது !

அதன் மதிப்பு அவருக்குத் தான் நன்ருகத் தெரியும். அதிலும் இந்த ஊரை விட்டு அவர் வெளியேறிய சந்தர்ப்பத் தையும், அப்படி வெளியேறும்படி நேரிட்ட அவசியத்தையும், நாற்பது வருடங்களுக்குப் பிறகு, இன்று அவர் அதே ஊருக்குத் திரும்பி வந்து விட்டதையும், இப்போதைய அவருடைய நிலைமையையும் ஒன்ருக எண்ணிப்பார்க்கிற போது அத னுடைய உண்மையான மதிப்பு புலப்படும்.

அட நாற்பது வருஷங்கள் போன இடம் தெரியாம ஓடி மறைஞ்சிருக்கு பாருமேன் 12

பிள்ளே அவர்களின் மனம் வியந்து கொண்டது.

-ஊம்வ். நாற்பது என்ன! நானுாறு வருஷம் கழிச்சு வந்து பார்த்தாலும் இந்த ஊரு அன்னேக்கி இருந்த மாதிரியே தான் இருக்கும். மனுசங்களும் அதே மாதிரித்தான், கொஞ்சம் கூட மாருமல் பழைய பெருமாள்களாகவே தான் இருப்பாங்க...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/9&oldid=589249" இலிருந்து மீள்விக்கப்பட்டது