பக்கம்:நினைவுச்சரம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரம் - 95.

மன. பென. கையில் வைத்திருந்தது ஆரஞ்ச நிறப்பாய். அதில் கபில நிறத்தில் இரண்டு புள்ளி மான்கள். ஒன்று குனிந்து புல்லே கடித்துக்கொண்டிருந்தது. அதை ஒட்டி நின்ற மற்றது தலைநிமிர்ந்து எங்கோ பார்த்துக்கொண்டிருந் தது. இரண்டும் உயிர்த்துடிப்போடு காணப்பட்டன.

- இதுமாதிரி மூங்கில்பாய் வேலைப்பாடு இப்போதெல் லாம் காணப்படுவதேயில்லே. அந்நாடுகளிலாவது இக்கைத் தொழில்கள் இருக்குமோ ; நசித்து மறைந்து போயிருக் குமோ? லேசுலேசான தாள்களே எப்படி எப்படியோ வெட்டி ஒட்டி, கியாஸ் லேட்டு, விசிறின்னெல்லாம் செய்து கொண் டாருவாங்க. பளிச்னு ரோஸ் சிவப்பு, இளநீலம், இடை யிடையே தாளின் வெண்மையும் கலந்து அவை ஜோராக இருக்கும். சுருக்கி மடக்கி வச்சிருப்பாங்க. விரிச்சதும் விளக்கு விசிறின்னு உருவாகும். சீனுக்காரனுகளே கொண் டாந்து விற்பாங்க. சில்க், சீன சில்க்குன்னு மூட்டை மூட்டை மூட்டையாகச் சுமந்துவந்தும் விற்பானுக. வெறும் அசிங்கம் புடிச்ச பயலுக. தவளையைப் புடிச்சு ஆமவடை திங்கிறது. மாதிரி கடிச்சுக் கடிச்சுத் தின்பாங்க. பள்ளிக்கூடத்துப் பையனுக தண்ணிப் பாம்புகளே புடிச்சுக் கொடுப்பாங்க. அவனுக துட்டு கொடுப்பானுக. பாம்பின் தலையை நறுக் குன்னு கடிச்சு, தூன்னு துப்பிப்போட்டு, ரசிச்சுத் தின் பாங்க; உடலேத்தான். வேடிக்கை பார்க்க ஒரு கூட்டமே கூடிரும். இதெல்லாம் இரண்டாவது உலக யுத்தம் தலேகாட் டுறதுக்கு முன்னுடி. அப்புறம்தான் எவ்வளவோ மாறுதல்கள் ஏற்பட்டுட்டுதே !

பெரியபிள்ளேயின் கையில் ஒரு பட அட்டை கிடைத் தது. நாற்பது வருஷங்களுக்கு முன்ல்ை, தமிழ்நாட்டு மத்தியதர, மேல் நடுத்தர, குடும்பங்களின் கல்யாணமான பெண்களும், கல்யாணத்துக்குக் காத்திருந்த கன்னிகை களும் கர்மசிரத்தையாகச் செய்து வந்த வேலைகளில் அதுவும் ஒன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/95&oldid=589339" இலிருந்து மீள்விக்கப்பட்டது