பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 நினைவு அலைகள் 'சொல்லாமல் போனாலும் தலைக்குத் தீங்கு வரலாம். ஆனால் அது பின்னால் என்றைக்கோ அல்லவா வரப்போகிறது? 'நடக்கக் கூடாது; நடந்துவிட்டது. அதை, இப்பவே நாலு பேருக்குச் சொல்லித் தொல்லைப்படுவானேன். தள்ளினவரைதள்ளட்டும்' என்று நினைத்து, அவன் சும்மா இருந்துவிட்டான். தன் வேலையில் முனைந்துவிட்டான். நான் வீட்டிற்குள் போய்விட்டேன். சாதி உணர்வை எதிர்த்துப் புரட்சி கோடை விடுமுறையின்போது நான் ஊரில் இருந்த நாளெல்லாம் தவறாமல் வேலைக்காரச் சிறுவனைத் தொடுவேன்; சில நாள்கள் இரண்டு மூன்று முறைகூடத் தொடுவேன். ஆனால் மற்றவர்களுக்குத் தெரியாது. சொன்னபடி, எனக்குக் கிடைக்கும் தின்பண்டங்களை அச் சிறுவனுக்கும் பங்கிட்டுக் கொடுப்பேன். அவருடைய பெயர் தெரிய வேண்டுமல்லவா? கொசப்பட்டான்' என்பது அவருடைய பெயர். திகைக்காதீர்கள்; நல்ல பெயர்வைக்கவும் தெரியாத அளவிற்கு அறியாமையில் நம்முடன் பிறந்து, நமக்காக உழைத்து மாயும் ஆதிதிராவிடர்களை ஆழ்த்தித் தாழ்த்தி வைத்துள்ளோம். இந்த அவலம் தொலையாதா? __ பள்ளிக்கூடம் திறந்தபோது காஞ்சிக்குச் சென்றேன். முன்பெல்லாம் செய்ததுபோல் இரயிலில், மற்றவர்கள் மேல் படாமல் ஒதுங்கி உட்காரவில்லை. சேர்ந்து உட்கார்ந்தேன். முதல் இரண்டொரு ஆண்டுகள் பள்ளியில் இருந்து வந்ததும், "தீட்டுப்பட்ட' என் உடையைக் களைந்து, நனைத்துவிட்டு, தீட்டுப்படாத உடையைப் போட்டுக் கொள்வேன். பலகாரக் கடை நிகழ்ச்சிக்குப் பிறகு, அப்படிச் செய்வதற்கு மறுத்தேன். பாட்டி சண்டை போடுவார். நான் அதைச் சட்டை செய்யமாட்டேன். அப்பாவிடம் சொல்லிப் பார்த்தார். அதனாலும் பயன் இல்லை. நான் பண்ணின கர்மம்; இப்படி, இந்த வயதில், தீட்டோடு வீட்டுக்குள் வந்தாலும் சும்மாப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. உள்ளே உட்கார வைத்துச் சோறு போட வேண்டியிருக்கிறது! 'நல்லதுக்கு இல்லை, இதெல்லாம். ஆடித்தான் அடங்கும். ஆனால் இந்தக் கண்றாவியை எல்லாம் பார்க்காமே, பொட்டுனு போய்விடக் கூடாதா? அவன் ஏனோ என்னை அழைத்துப் போக மறந்துவிட்டான்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/124&oldid=786867" இலிருந்து மீள்விக்கப்பட்டது