பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 1 O1 சாதிகள் உள்ளவரை சாதிகளின் பெரும்பிரிவு அடிப்படையில் அரசின் கீழ் உள்ள எல்லாப் பதவிகளையும் பங்கிட்டுத் தரவேண்டு மென்பது புதிய கட்சியின் குறிக்கோள். அதன் வேர்கள் அன்றைய சென்னை மாநிலத்தைச் சேர்ந்த தமிழகம், ஆந்திரம், மலையாளம், தென்கன்னடப் பகுதிகளுக்குப் பரவின. ஒரு காலகட்டத்தில் அன்றைய பம்பாய் மாகாணத்தின் தென்பகுதிக்கும் மத்திய மாகாணத்திற்கும் பரவின. நான் சிறுவனாக இருந்தகாலை நம் சென்னை மாநிலத்தில், இந்திய தேசிய காங்கிரசும் நீதிக்கட்சியும் பொதுமக்கள் ஆதரவைப் பெறப் போட்டியிட்டன. இரு சார்பிலும் எண்ணற்ற மேடைப் பேச்சுகள் எழுச்சியூட்டின. 11. திண்ணைப் பேச்சில் தீப்பிடித்தது -*. நாளிதழ்கள் செய்த தொண்டு 'சுதேசமித்திரன்' என்ற நாளிதழ், காங்கிரசின் கொள்கையை நாட்டு மக்கள் முன்வைத்தது. நீதிக்கட்சி நடத்திய 'திராவிடர்கள் என்ற தமிழ் நாளிதழ், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்காக ஆதரவு திரட்டியது. இரு நாளிதழ்களும் இந்த நூற்றாண்டின் இருபதுகளில் எங்கள் ஊருக்கு வந்துகொண்டிருந்தன. அவை நாட்டு நடப்பைக் காட்டின. பொதுச் சிக்கல்களை நாடறியச் செய்தன. அரசியல், சமூகவியல் பற்றிய சிந்தனைகள் பொதுமக்கள் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டன. எதிரும் புதிருமான கொள்கைகள், திட்டங்கள், மக்களின் விழிப்பை சிந்தனையைத் துண்டின. அக்காலத்தில் நாட்டுப் புறங்களில் நாள்தோறும் அஞ்சல் வராது. வாரத்திற்கு ஒரு நாளோ, பெரிய சிற்றுார்களாயின் இரண்டு மூன்று நாள்களோ அஞ்சல் கிடைக்கும். அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் சினிமாவை அறியாது; அன்று வானொலி கிடையாது. எனவே, வாரத்திற்கு ஒரு நாள், அத்தனை நாளிதழ்களிலும் மொத்தமாக வரும் நாள், ஏதாவது ஒரு திண்ணையிலோ, ஊர்க் கோடியில் உள்ள அரச மரத்தடி மன்றத்திலோ கூடி, செய்திகளைப் படிப்பார்கள். அவை பற்றிக் கலந்துரையாடுவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/143&oldid=786894" இலிருந்து மீள்விக்கப்பட்டது