பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 147 இரண்டையும் பிரித்து உணர்ந்து, சமயோசிதமாக நடக்கும் இயல்பும் வாழ்க்கைக்குத் தேவை. இதையும் வளர்க்கக் கை கொடுப்பது சுற்றுலாக்கள். கல்விச் சுற்றுலாவை, வெறும் பொழுது போக்கும் உலாவாக ஆக்கிவிட வேண்டாம். ■ காட்சி இன்பம் மட்டுமே, கல்விச் சுற்றுலாவின் நோக்கமல்ல. கருத்து ஊறலும் நோக்கமாகும். அப்படியானால் போகும் இடங்கள் பற்றிய அடிப்படைச் செய்திகளை, வரலாற்று வெளிச்சங்களை, தகவல்களை, முன்கூட்டியே தெரிந்து கொள்ளுதல் நல்லது. ஆற்று மணலைக்கொண்டு, குழந்தைகள் எத்தனை உருவங்களை உருவாக்குகிறார்கள்? மனித உருவங்கள், மிருக உருவங்கள், வீடுகள், கோயில்கள், இப்படிப் பலப்பல, சிறுவர் சிறுமியரின் கற்பனைகளில் மின்னுகின்றன; அவர்களுடைய கை விரல்கள் அவற்றை உருவாக்கிக் காட்டுகின்றன: நாம் பார்த்து மகிழ்கிறோம். -- இதிலும் அதிலும் சிறு சிறு மாற்றங்களைச் செய்யச் சொல்லி, மகிழ்கிறோம். பிள்ளைகளுக்கு அளிக்கும் முழு உரிமையே அவர்களுடைய சீரிய கற்பனைகளை, நல்ல கைத்திறன்களை வளர்க்கும் வழியாகும். உரிமையே உயிர் சாதனைக்கு வேர். இதே போல், சுற்றுலா செல்லும் மாணவர்கள், காட்சிகளிலிருந்து பெறும் கருத்துகளை உண்மையாக வெளியிட உரிமை கொடுக்க வேண்டும்; வெளியிடும்படி ஊக்குவிக்க வேண்டும். அத்தனையும் தெளிந்த கருத்தாகவே இருக்குமென்று மயங்க வேண்டாம். ஊறிப் பொங்கும் சுனை நீரை, பக்குவப் படுத்திப் பயன்படுத்துதல் எளிது. தேங்கிக் கிடக்கும் சேற்று நீரை, பயன்படுமாறு பக்குவப்படுத்தல் எளிதல்ல. -- கருத்துகள் ஊறட்டும்; புதுமையாக ஊறட்டும். பழமையான நம் கருத்துகளில் பாசி படர்ந்தவை இருக்கலாம். அந்தப் பாசியின் பசுமையும் நமக்கு இனியதாகத் தோன்றலாம். எனவே கல்வியாளர்கள், சுற்றுலாவைச் சிறந்த காட்சிகளைக் காணும் வாய்ப்புகளாகவும், புதுப் புதுக் கருத்துகள் ஊறும் சுனைகளாகவும் மாற்றுவதற்கு முயல்வார்களாக. முதல் துாரப் பயணம் சில ஊர்களோடு அடங்கிக் கிடந்த எனக்குப், பத்து, பதினோராவது வகுப்புகளில் படிக்குங்காலை, பெருநகரம் ஒன்றிற்குச் சென்று அங்கே தங்கும் வாய்ப்புகள் கிடைத்தன. என் மாமாவின் மாமனாரான திரு. எம்.எஸ். துரைசாமி முதலியார் என் தந்தைக்கு மிகவும் வேண்டியவர். வேலூரில் பெருவாழ்வு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/189&oldid=786979" இலிருந்து மீள்விக்கப்பட்டது