பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு T 65 கல்லூரி சேர்க்கைக் கடிதத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த கோடை விடுமுறையின்போது நாள்தோறும், ஒர் ஆளை காவாந்தண்டலம் அஞ்சல் நிலையத்திற்கு அனுப்புவோம். 'கட்டு உடைக்கிற வேளைக்குப் போனால் மட்டுமே, அஞ்சல் நிலைய நண்பர். எங்களுக்கு வரும் கடிதங்களை உடனுக்குடன் கொடுக்க முடியும். உடைத்து, 'பட்டுவாடா செய்யாமல் கட்டிவிட்டால், எங்கள் ஊருக்கு முறைவரும் நாள் வரை காத்திருக்க வேண்டும். அம்முறையோ வாரத்திற்கு ஒரு தரமே வரும். ஒரு வாரம் காத்திருந்தால், இடம் போய்விடலாமென்ற அச்சத்தில், நாள்தோறும் ஒர் ஆளை, வேகா வெயிலில் காவாந்தண்டலத்திற்கு அனுப்ப வேண்டியிருந்தது. பாதிது.ாரம் ஆற்று மணலாக இருந்ததால் போகும் ஆள், செருப்பணிந்தும் போக இயலாது. வெறுங்காலோடு கொதி மணல் மேல் நடக்க வைத்த கொடுமையை நினைத்தால், இன்றும் நெஞ்சம் வேதனைப்படுகிறது. அன்று அது ஏனோ உறுத்தவில்லை. பல நாள்களுக்குப் பிறகு எதிர்பார்த்த கடிதம் வந்து சேர்ந்தது. சென்னைக் கிறுத்துவக் கல்லூரியில் இண்டர்மீடியட்' வகுப்பில் முதல் பிரிவில் இடம் ஒதுக்கியிருப்பதாக அது அறிவித்தது. "கெய்த்னஸ் ஹால் ' என்னும் மாணவர் விடுதியிலும் இடம் போட்டிருப்பதாக அக்கடிதம் சொல்லிற்று. இவ்விரண்டைக் காட்டிலும் இனிய செய்தியும் அதில் இருந்தது. அது என்ன? தேர்வில் காஞ்சிபுரம் கிறுத்துவ உயர்நிலைப் பள்ளியில் நான் இரண்டாம் இடத்தைப் பிடித்து இருந்ததைப் பாராட்டி, எனக்கு இலவசக் கல்வி அளிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமா? விடுதிச் செலவுக்காக உதவித்தொகை கிடைக்கும். எவ்வளவு என்று சேரும்போது அறிவிக்கப்படும். இத்தகவலும் கிடைத்தது. - இலவசக் கல்வியும் என்பாட்டனார் கவலையும் இலவசக் கல்வி, உதவித் தொகை முதலியன அக்காலத்தில் நாங்கள் கேள்விப்படாதவை. அப்படிப்பட்டவை என்னைத் தேடி வருகின்றன என்று கேள்விப்பட்டபோது எனக்குத் தலைகால் தெரியவில்லை: ஒரே குது.ாகலம். என்னை நாடி வந்த இலவசக் கல்வி எல்லோர்க்கும் கிடைக்கட்டும் என்று எண்ணக்கூட அன்று துணிவில்லை: துணிவில்லாதபோது தெளிவு ஏது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/207&oldid=786999" இலிருந்து மீள்விக்கப்பட்டது