பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 நினைவு அலைகள் தியாகராயரின் நேர்மை டாக்டர் நடேசனாருடைய நீதிக்கட்சியோடு, பண்டித அருணகிரி நாதரும் தொடர்பு கொண்டிருந்தார். எனவே இருவருடைய உரையாடலும் நெருக்கமாய் இருந்தது. நேய பாவத்துடன் இருந்தது; கலகலப்பாக இருந்தது. 'தியாகராயர் எப்போதும் அணிந்திருந்த வெள்ளுடை போன்றே அவருடைய உள்ளமும் வெண்மையாயிருந்தது. பொதுத்தொண்டும் தலைமைப் பதவியும் செய்தற்கரிய செய்வதற்கு வாய்ப்பு. நீதிக்கட்சி அமைச்சரவை அமைக்க நேர்ந்தபோது, சர் தியாகராயர் 'முதல்' அமைச்சர் பதவியை ஏற்க மறுத்துவிட்டார். தம்முடைய தோழர்களைக் கொண்டு அமைச்சரவை நிறுவச் செய்தார். தியாகராயச் செட்டியாரின் தியாகம் பெரிது: பிறருக்குச் சிறந்த எடுத்துக் காட்டானது. 'உள்ள உறுதிக்கு மட்டும் குறைவா? 1921இல் வேல்ஸ் இளவரசர், சென்னைக்கு வந்தபோது, செட்டியார் சென்னை மாநகராட்சியின் தலைவராக இருந்தார். மாநகராட்சியின் சார்பில் இளவரசரை வரவேற்க வேண்டியது அவருடைய பொறுப்பு. அச்சடங்கின்போது, கறுப்பு உடை அணிந்திருக்க வேண்டுமென்பது மரபு. அம்மரபைத் தியாகராயச் செட்டியாருக்கு அரசின் சார்பில் நினைவு படுத்தினார்கள். 'என்றும் போல் அன்றும் தூய வெள்ளுடையில் மட்டுமே வர முடியும். அதை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் வேறொருவரைக் கொண்டு வரவேற்க ஏற்பாடு செய்து கொள்ளுங்கள் என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார். அரசு இறங்கி வந்தது; தியாகராயர் வெள்ளுடையில் வர இசைந்தது. 'திரு.வி.க.வும் தியாகராயச் செட்டியாரும் அரசியலில் இரு கோடிகளில் இருந்தார்கள். காங்கிரசு இயக்கத்தைப் பரப்புவதில் திரு.வி.க. முன்னணியில் நின்றார். பார்ப்பனரல்லாதாருக்கு உரிய பங்கைக் கொடுங்கள் என்று போராடிய நீதிக்கட்சி திரு.வி.க. வுக்கு கசந்தது. தொடக்கத்தில் நீதிக்கட்சியைத் தாக்கும் பீரங்கிகளில் முக்கியமானவராத் திரு.வி.க. விளங்கினார். 'அவர் சென்னையில் தொழிலாளர் இயக்கத்தை உருவாக்கிப் போராட்ட உணர்வினை ஊட்டி வந்தார். சென்னையில் வெள்ளை யருக்குச் சொந்தமான ஆலையில் வேலை நிறுத்தம்; கதவடைப்பு. இரண்டொரு நாள்களாகவா வேலைநிறுத்தம் 2 ஆறு மாதங்கள் தொடர்ந்து வேலைநிறுத்தம் நடந்தது. அரசு வெகுண்டது. கடுமையான அடக்குமுறையைக் கையாள முடிவு செய்தது. * 'ஆளுநர் வெல்லிங்டன் தொழிலாளர்தலைவராகிய திரு.வி.க. வை நாடு கடத்த முடிவு செய்தார். அவ்வாணையில் கையெழுத்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/216&oldid=787009" இலிருந்து மீள்விக்கப்பட்டது