பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 நினைவு அலைகள் பித்தன் இவற்றை வெளியிட்டதோடு நிற்கவில்லை. திரு. முதலியார், தமது தலைமையுரையில் மாணவர்கள் அரசியல் விவகாரங்களில் கலந்து கொள்ளக்கூடாது என்று சொன்னதையும் வெளியிட்டது. ஈடுபடாக் கொள்கை'யை வற்புறுத்திய இராமசாமி முதலியார் தலைமையில் நடந்த அம்மாநாடு, சைமன் கமிஷனுக்கு நல்வரவு கூறுவதாக முடிவு செய்தது. அதையும் வெளியிட்டு 'அறிவுரைக்கும் முடிவுகளுக்கும் இடையே உள்ள முரண்பாட்டைச் சுட்டிக்காட்டியது. சைமன் கமிஷனை வரவேற்பது அரசியல் விஷயம் அல்லவா? என்று கேட்டது. 'சமுதாயச் சீர்திருத்தம் ஒருவர் கொடுக்கும் பொருளல்ல. அதிலும் சைமன் கமிஷனுக்கு நல்வரவு கூறினதால், நாம் முன்னேறிவிடுவோமென்று எண்ணுவது மிகவும் தவறு' என்று 'பித்தன் கருத்தை வெளியிட்டது. திரு. பிரகாசம் தலைமையில் கூடிய இளைஞர் மாநாடும் திரு. ஆ. இராமசாமி முதலியார் தலைமையேற்ற இளைஞர் மாநாடும் செய்யத் தவறிய ஒன்றைச் சுட்டிக்காட்டி, "பித்தன் தமது வருத்தத்தைத் தெரிவித்தது. பித்தனின் கூற்றைப் படியுங்கள். 'இரண்டு மகாநாட்டாரும் தேசியச் சாமான்களையே வாங்கி, தேசியக் கைத்தொழிலை ஆதரிக்க வேண்டுமென்று ஒரு விதத் தீர்மானமும் நிறைவேற்றவில்லை. இது வருந்தத்தக்க விஷயம்.' தேசிய காங்கிரஸ், நீதிக்கட்சி ஆகிய இரு கட்சி மாநாடுகளையும் துணிச்சலாகக் குற்றஞ் சாட்டியது அன்றைய பித்தன். அன்னியன் ஆண்டபோது, நம்மிடையே உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்ட முடிந்தது. தன்னாட்சி உரிமை பெற்ற இந்தியாவில் அந்த உரிமை துருப்பிடித்து விட்டது. இக்காலத்து இளைஞர்கள் அப்படித் துணிந்தால், தொலைந்தார்கள், கால்களைத் தொட்டுக் கும்பிடப் பக்குவப் படுத்திக் கொள்ளும் வரை, தலைமறைவாக இருந்தே தீரவேண்டும். கல்வி வளர்ச்சியைத் தடுப்பதா? 'பித்தன்' அன்னிய அரசாங்க நிர்வாகத்தைப் பற்றிய குறையைச் சுட்டிக் காட்டவும் தயங்கவில்லை. 1927-28 க்கு ஆன பொதுக்கல்வி இயக்குநரின் அறிக்கையின் சுருக்கத்தை வெளியிட்டு, பித்தன் தன் கருத்தைத் தெரிவித்தது. போன ஆண்டு சென்னை இராஜதானியில் 53,838 பள்ளிக்கூடங்கள் இருந்தன. அவைகளில் 25,23,188 பிள்ளைகள் படித்தார்கள். இவ்வாண்டு பள்ளிகளின் தொகை 50,260. இதில் படிப்பவர்கள் 26,60,672.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/276&oldid=787080" இலிருந்து மீள்விக்கப்பட்டது