பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து-சுந்தரவடிவேலு 257 கலப்பு மனத்தை ஆதரித்த காந்தியவாதி மயிலாப்பூரில் சிறந்த வழக்கறிஞராக விளங்கிய திரு. , கோதண்டராமன், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எவ்வளவு பொல்லாதவராக புரட்சிக்காரராக இருந்தார் தெரியுமா? வழிவழிச் சைவக் குடும்பத்தில் பிறந்த திரு. சு. கோதண்டராமன் கலப்பு மணம் செய்துகொண்டார். சைவத் திருமடங்களின் பட்டத்திற்குரிய மற்றொரு சைவ சாதியிலா? இல்லை. பின் யாரை இராஜபுத்திர வகுப்பைச் சேர்ந்த செல்வி ருக்குமணி தேவியை, வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்டார். மடங்களுக்குரிய சைவர்களுக்கிடையே கூட, இன்னும் கலப்புமணம் அரிதாக உள்ளது. இப்படிப்பட்ட கற்பாறைத் தமிழ்ச் சமுதாயத்தில், ஐம்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, ஒர் இளைஞர் துணிந்து முன்வந்து, என்னைப் போன்றவர்களுக்கு நல்வழி காட்டினார். மெளனப் புரட்சி செய்த அவரை எண்ணுந்தோறும் உள்ளம் பூரிக்கிறது. அரிமாக்களின் கூட்டத்தில் வாழ்ந்த உணர்வு சுரக்கிறது. வனமலர்ச் சங்கம் பாராட்டு 'வழக்குரைஞர் திரு. சு. கோதண்டராமன் ஏதோ செய்து விட்டார்: நாம் கண்டுங் காணாது இருப்போம். என்று அவருடைய நண்பர்கள் இருக்கவில்லை. திருப்பரங்குன்றத்தில் அவர் செய்துகொண்ட கலப்புத் திருமணத்தைப் பாராட்டிச் சென்னையில் அவர்களுக்கு உண்டாட்டு ' ஏற்பாடு செய்தார்கள். உண்டாட்டு என்னும் சொல்லே அன்று பயன்படுத்தப்பட்டது. உண்டாட்டில் நண்பர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களோடு மாப்பிள்ளையின் தந்தையார் சாத்துரர் திரு. சுப்பிரமணிய நாயனார் சேர்ந்தார். அதுவே பாராட்டுக்குரியது. அதோடு நிற்காமல் மணமக்களைப் பாராட்டிப் பேசினார். என்ன கூறினார்? பெற்றோர்கள் இளங்காதலர்களின் போக்குக்குத் 'செய்யக்கூடாது. அது அதிகக் கெடுதியை விளைவிக்கும். 'நான் கலப்பு மணம் செய்து கொள்வது எனது பெற்றோராலும், மற்றோராலும் தடை செய்யப்பட்டது. ஆகவே எனது குமாரன் கலப்பு மனம் செய்துகொள்ள விழைந்தபோது நான் அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியுடன் விடையளித்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/299&oldid=787120" இலிருந்து மீள்விக்கப்பட்டது