பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 26 "அதே நேரத்தில் மற்ற விடுதிகளில் இருப்போருக்கு இல்லாத தை வசதியொன்று விக்டோரியா விடுதியில் தங்குவோருக்கு இருக்கிறது. 'வெளியே பத்தடி நடந்தால் கடற்கரை. சென்னைக் கடற்கை நீண்டது; உலகத்தில் இரண்டாவது சிறப்புடையது என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். 'இயற்கை அழகோடு மக்கள் அழகையும் மாலை நேரங்களில் கண்டு மகிழ வாய்ப்புண்டு. உங்களில் பலர் வெளியூர்களில் வேலை செய்ய நேரிடலாம். அவர்கள், சென்னைக் கடலோரம் உலாவி, பலரையும் கண்டு மகிழும் வாய்ப்பைப் பின்னால் பெற இயலாது. உடற்பயிற்சியை அநேகமாக எங்கும் பெறலாம். * 'விடுதியில் உள் அரங்கத்தில் முடங்கி விடுவதா? மாலைதோறும் கடற்கரைக் காட்சிகளில் திளைப்பதா? இரண்டில் எதற்கு முன்னுரிமை கொடுக்க விரும்புகிறீர்கள்? 'உடன் உறைவோரையும் கலந்துகொண்டு வந்து சொல்லுங்கள். உங்கள் விருப்பத்தையொட்டி சிந்திக்கிறோம். இப்படி இதமாகக் கூறினார், காப்பாளர் அரங்கநாதம். மாணவத் தலைவர்கள், வெள்ளைக் கொடி காட்டி விட்டார்கள். மாலை நேரங்களில் கடலோரம் சுற்றி வந்து வெளிச்சம் போடுவதையே விரும்புவதாக அறிவித்து விட்டு வந்தார்கள். நாங்களும் அவ்விதமே கருதினோம். பூசல் பூக்கவில்லை. சில திங்கள்களுக்குப் பிறகு, திரு. எஸ்.ஈ. அரங்கநாதத்தைப் புதிதாக அமைக்கப்பட்ட, அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு முதல் துணைவேந்தராக நியமித்தார்கள். அப்பொறுப்பை ஏற்பதற்காக அவர் மாநிலக் கல்லூரியையும் விக்டோரியா விடுதியையும் விட்டுச் சென்றார். அரங்கநாதம் முதல் துணைவேந்தராக இருந்து, அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்குச் சரியான அடித்தளம் அமைத்துத் தந்தார். விக்டோரியா மாணவர் விடுதிக் காப்பாளர் பொறுப்பை மாநிலக் கல்லூரி அரசியல் பேராசிரியர் திரு. பிராங்கோ ஏற்றுக் கொண்டார். இவரும் கிறுத்துவர். இவருடைய காப்பில் நான்கு ஆண்டுகள் விக்டோரியா விடுதியில் இருந்தேன். அவர் கால நிகழ்ச்சிகள் பின்னர் எழுதுகிறேன். சைமன் குழுவும் மாணவர் வேலை நிறுத்தமும் se நான் கல்லூரியில் முதல் ஆண்டில் படித்துக் கொண்டிருக்கையில், சி' நாட்டை கலக்கிய அரசியல் நிகழ்ச்சியொன்று நடந்தக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/309&oldid=787144" இலிருந்து மீள்விக்கப்பட்டது