பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 நினைவு அலைகள் திருமதி. மோனா என்ஸ்மனை அழைக்கும் பேரவை, திருமதி ருக்மணி லஷ்மி பதியை அழைக்கத் தயங்காது. பல சிறந்த பேச்சாளர்களின் பேச்சுகளைக் கேட்க வாய்த்தது. எனக்குப் பிற்காலத்தில் உதவியாயிற்று. மாணவர் பேரவை சார்பில், சென்னைக் கல்லூரி மாணவர் களிடையே பேச்சுப்போட்டி நடப்பதுண்டு. நான் இண்டர்மீடியட்டில் படிக்கும்போது நடந்த நிகழ்ச்சியொன்று நினைவிற்கு வருகிறது. அனைத்துக் கல்லூரிப் பேச்சுப்போட்டியானதால், இலயோலா, பச்சையப்பன், கிறுத்துவக் கல்லூரி மாணவர்கள் பலர் வேடிக்கை பார்க்க வந்திருந்தனர். போட்டி சூடு பிடித்தது. அச்சூடு அவையோரையும் தாக்கிற்று. எனக்கு அடுத்து ஒரு மாணவர் அமர்ந்திருந்தார். அவர் என் அன்ப இலயோலாக் கல்லூரி மாணவர். பெரிய வீட்டுப் பிள்ளை. தன் ஊரில் நினைத்ததை முடிக்கும் ஆற்றல் பெற்ற குடும்பகம் திகழ்ந்தது, அவருடைய குடும்பம். பேச்சாளர் ஒருவரின் கருத்தும் பேச்சுப் போக்கும் அந்த அன்பருக்கு ஆத்திரமூட்டின. ஆனால் அவருக்கு முன் இருந்தவர் வெளிப்படையாகப் பேச்சாளரை ஆமோதித்தார். அமர்ந்திரு . இடத்தை விட்டுக் குதித்தெழுந்தார் என் அன்பர். தன் முன்பே இருந்தவரை ஓங்கி அறைய முயன்றார். இமைப் பொழுதில், என் ஆண்மை பொங்கிற்று. நான் பொடிய என்பதை மறந்துவிட்டேன். அடாது செய்வதைத் தடுக்கம் தலையிட்டேன். வாட்டசாட்டமான என் அன்பரின் கைகளைச் சட்டென்று பற்றினேன். இழுத்து உட்கார வைத்தேன். சில மணித்துளிகள், அவருடைய வலிய கைகளை வ பிடியிலிருந்து விடாமல் பிடித்திருந்தேன். பாண்டிநாட்டு அன்பா அமைதி பெற்றார். பேச்சுப் போட்டி முடிந்து கலைந்தோம். அப்போது அவருக்கு 'பொடியன் அறிவுரை கூறினேன். 'பேச்சுரிமை புனிதமானது. கருத்துரிமையும் அதைப் போன்றதே! வன்முறையால் அவற்றைத் தடுக்க முயலக்கூடாது. அவ்வாறு த ப் து அறிவுடையோர்க்கு அடையாளமாகாது. 'கல்லூரி வரை வந்துவிட்ட நாம், பிடிக்காத கருத்தைக் கே , வெகுளுவதும் அத்தகைய கருத்தை ஆதரிப்போரை அடிக்கப் போவ காட்டுமிராண்டித்தனம்' என்று அவருக்குச் சுட்டிக்காட்டினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/314&oldid=787150" இலிருந்து மீள்விக்கப்பட்டது