பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த சுந்தரவடிவேலு 273 காந்தியவாதியான அவரும் அதைப் பொறுமையோடு ஏற்றுக் கொண்டார். என் மாணவப் பருவத்திலும் இளமைக் குறும்புகள் இருந்தன. பேச்சாளர்களை, சிலவேளை கிண்டல் செய்வோரும் இருந்தனர். ஆயினும் விளையாட்டுகள் வரம்பு மீறிப்போகா, வன்முறைகளாக, ாணத்தக்க நடத்தைகளாகக் கோரக் காட்சிகளோடு ஒருபோதும் ருவெடுத்தது இல்லை. ஏன் அப்படி? வழிவழி படிக்கும் பெரிய இடத்துப் பிள்ளைகளைப் பார்த்து அவர்களைப் போன்ற நாகரிகத்தோடு நடக்க வேண்டுமென்று முயன்றோம். எங்கள் நாட்டுப்புறத்துக் கரடுமுரடுகளைக் கல்லூரிகளில் காட்ட அப் ேெனாம். எனவே, கல்லூரிகள் பண்படுத்தும், முறைப்படுத்தும், ஒழுங்கு பத்தும், ஒளிவிடச் செய்யும் இடங்களாயின. 34. தாத்தாவின் மறைவு வேதனைப்படுத்திய அவலக் கனவு நான் கல்லூரியில் முதலாண்டு படிக்கையில் வேதனையான நிகழ்ச்சி அன்று நடந்தது. வகுப்பறைகளில் இருக்கும்போது என் சிந்தையை ஒருமுகப்படுத்துவேன்; நடக்கும் பாடத்தில் செலுத்துவேன். எனவே, சாதாரண அறிவு படைத்த என்னாலும் கணக்கு, விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற பாடங்களை எளிதில் ஈர்த்துக் கொள்ள முடிந்தது. சில வாரங்களில் பாடங்கள், தேர்வுகள் பற்றிய அச்சம் அகன்று விட்டது. சினிமா பார்க்கும் பழக்கமும் இல்லை. ஆகவே பெரும்பாலும் இரவு ஒன்பது மணிக்கே உறங்கி விடுவேன். விடியற்காலை ஐந்து மணிவரை அயர்ந்து உறங்குவேன். ஒரிரவு ஒன்பது மணிக்குப் படுக்கையில் படுத்தேன். கண்களை முடினேன். சரியான உறக்கம் வரவில்லை. அவலக் காட்சியொன்று தோன்றி என்னை வேதனைப்படுத்தியது. அதை மறக்க முயன்றேன்; முடியவில்லை. ஆறுதல் பெற முயன்றேன்; தோற்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/315&oldid=787151" இலிருந்து மீள்விக்கப்பட்டது