பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 285 மாநாட்டின் உயிர் செங்கற்பட்டுச் சுயமரியாதை மாநாட்டின் மூளை, நாடி நரம்பு, எல்லாம் பெரியார் ஈ.வெ. ராமசாமி ஆவார். அவருடைய இயக்கத்தின் உயிர்த்துடிப்புகளான மாயூரம் எஸ். இராமநாதன், மாயூரம் நடராசன், குத்துசி குருசாமி, பட்டுக்கோட்டை அழகிரிசாமி, எஸ்.வி. லிங்கம், பூவாளுர் பொன்னம்பலனார், சாமி சிதம்பரனார் ஆகியோர் மாநாட்டில் கலந்துகொண்டனர். ஏத்தாப்பூர் ஏ.எஸ். அருணாசலம், சொ. முருகப்பா, கோவை சி.ஏ. அய்யாமுத்து, நாகை என்.பி. காளியப்பன், ச.ம.சி. பரமசிவம், கோவை ஏ.ஆர். சிவானந்தம், அருப்புக் கோட்டை கருப்பையா, சித்தக்காடு இராமையா, திருமதி மூவலூர் இராமாமிர்தத்தம்மாள் ஆகியோரும் சுயமரியாதை மாநாட்டில் பங்கு கொண்டார்கள். நீதிக்கட்சித் தலைவர்களான திருவாளர்கள் ஏ. இராமசாமி முதலியார், என்.ஆர். சாமியப்ப முதலியார், ஏ.டி. பன்னிர்செல்வம், பி.டி. இராஜன், ஜே.எஸ். கண்ணப்பர் முதலானோர் ஆர்வத்தோடு கலந்து கொண்டார்கள். அந்த மாநட்டின் கருத்து அருவிக்கு அழைத்துப் போவதற்கு முன், அதன் அமைப்பைப் பற்றிய சில விவரங்களைக் கூற விரும்புகிறேன். அம்மாநாட்டில் கலந்துகொண்ட பெரியோர்களில் பலர் சென்னையில் இருந்து சென்றார்கள். நெடுஞ்சாலை வழியாகச் சென்றோர் ஆயிரக்கணக்கில். அப்போது, சென்னை கன்னியாகுமரி நெடுஞ்சாலை, இப்போதிருப்பதைக் காட்டிலும் பசுமை அடர்ந்ததாக இருந்தது. வழி நெடுகிலும் நெடுமரங்கள் கைகோத்து நிற்பது போன்று மிக நெருக்கமாகக் காட்சி அளித்தன. தாம்பரத்தைத் தாண்டி, இரும்புலியூர் இரயில்வே கேட்டிலிருந்து செங்கற்பட்டுவரை இன்றைக்கிருப்பதைக் காட்டிலும் இரண்டு மூன்று பங்கு தென்னை மரங்கள் ஓங்கி வளர்ந்து காய்த்துக் குலுங்கி நின்றன. அத்தனை மரங்களும் உடலின் நடுவில் வெள்ளைச் சுண்ணாம்புப் பூச்சும் செம்மண் பூச்சும் பெற்று அலங்காரமாக நின்றன. அக்காட்சியே அழகிய காட்சி. ಶ್ಗಿತ್ತು அப்படிப்பட்ட பதினெட்டு மைல்கள் நீண்ட அழகிய விய மக்கள் கண்டதில்லை. அழிநெடுகிலும் வரவேற்பு வளைவுகளுக்குக் குறைவில்லை. "ாட்டுப் பந்தல், அக்காலகட்டத்திற்கு மிகப் பெரியது: பக் + --- H. == 'சம் பேர்களுக்கு மேல் தாராளமாக உட்காருவதற்கு இட்ம் அளித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/327&oldid=787164" இலிருந்து மீள்விக்கப்பட்டது