பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 நினைவு அலைகள் ஊக்க ஒலிகளும் வரவேற்பு முழக்கங்களும் கொண்ட அட்டைகள் தூண்தோறும் கம்பீரமாகத் தொங்கின. அந்த மாநாடு மெய்யாகவே பொதுமக்கள் மாநாடாக விளங்கிற்று. அதில் பெரும் பட்டதாரிகள் இருந்தார்கள். பொது வாழ்க்கையில் செல்வாக்குடைய பெரும்புள்ளிகள் இருந்தார்கள். செல்வர்கள் இருந்தார்கள். ஆனால் பொதுமக்களே, செல்வங் காணாத பெருமக்களே, பள்ளிப்படிப்பையும் முழுமையாகப் பெறாத நாட்டு மக்களே, சொக்காய் போட்டுப் பழகாத மக்களே ஏராளம், ஏராளம். தமிழ்நாட்டு மூலை முடுக்குகளில் இருந்து ஆர்வத்துடன் குழுமிய அவர்கள் தமிழக வரலாற்றின் திருப்புமுனையை, புதுத்திசையை முடிவு செய்தார்கள். ஆங்கிலேயனும் பொறாமைப்படும் அளவு ஆங்கிலத்தில் அபாரமான நாவன்மை படைத்த ஏ. இராமசாமி முதலியார் போன்றோரின் சில ஆங்கிலப் பேச்சுகளையும் கேட்டோம். எண்ணற்ற உள்ளக் குமுறல்களை, உண்மை உணர்வின் வெடிப்புகளை, எரிமலைகளை, தாய்த் தமிழ்ப் பேச்சுகளின் வழியாகக் கேட்டோம். அவற்றைக் கேட்டபின் என்ன முடிவுக்கு வந்தோம்? ஒரு முடிவை அல்ல; முப்பத்தினான்கு முடிவுகளை மேற் கொண்டோம். அம் முடிவுகளில் சில போர் முழக்கங்களாக ஒலித்தன; இன்றும் கணிர் என்று ஒலித்துக் கொண்டிருக்கின்றன; இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு ஒலிக்கத் தேவையிருக்குமோ? எனக்கு ஆரூடம் சொல்லத் தெரியாது; அதில் நம்பிக்கையும் இல்லை. நம் சமுதாயம் மாற வேண்டிய அளவிற்கு அடியோடு மாறும்வரை, அப்போர் முழக்கங்கள் குன்றாமல் ஓங்கி ஒலிக்கும என்பது மட்டும் உறுதி. எதனால் இவ்வளவு உறுதியாகச் சொல்லுகிறேன்? எம்.ஜி.ஆர் எடுத்த நூற்றாண்டு விழா ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்து எட்டாம் ஆண்டு செப்டம்பர் பதினேழு, பதினெட்டாம் நாள்கள் ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சிகள். 'பழைய உணர்வுகள் பட்டுப்போகவில்லை; தன்மான இயக்கம் எந்தெந்தத் தீமைகளை ஒழிக்க நினைத்துத் தோன்றியதோ, அவை இன்றும் வெவ்வேறு நிலை உயிர்ப்போடு இருக்கின்றன. --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/328&oldid=787165" இலிருந்து மீள்விக்கப்பட்டது