பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 நினைவு அலைகள் இந்நூற்றாண்டின் இருபதுகளிலும் முப்பதுகளிலும் சுயமரியாதைச் சுடர் ஈ.வெ.ரா.வும் அவருடைய இயக்கத்தவரும் பங்கு கொள்ளாத ஆதிதிராவிட மாநாடோ, சிறப்பு நிகழ்ச்சியோ தமிழகத்தில் இல்லை. கொச்சியும் திருவிதாங்கூரும் ஈ.வெ.ரா. வைப் பயன்படுத்திக் கொண்டன. பெருந்துறைக்கு அருகில் உள்ள புதிய ஆதிதிராவிட குடியிருப்பில் நிகழ்ந்த வாலிபர் சங்க ஆண்டு விழாவிற்குச் செல்ல, ஈ.வெ.ரா. அவர்கள் ஒற்றை மாட்டு வண்டியில் பத்துக் கல் பயணம் செய்ய நேர்ந்தது. என்னே ஈ.வெ.ரா.வின் தொண்டு உள்ளம்! குடியிருப்புகளில் இருந்தவர்களுக்கு மெய்யான காவலராக, நண்பராக, தோழராகப் பெரியார் விளங்கியது போலவே, மற்ற தன்மான இயக்கத்தவர்களும் விளங்கினார்கள். முதல் சுயமரியாதை மாநாட்டில் நிறைவேறியது போன்றே ஈரோட்டு மாநாட்டில் பூசாரி மறுப்பு முடிவு எடுக்கப்பட்டது. வணங்குவோருக்கும் வணங்கப்படுவதற்கும் மத்தியில் தரகரையோ, பூசாரியையோ ஏற்படுத்துவது சுயமரியாதைக்கு விரோதம் என்றும், தெய்வ வணக்கத்திற்குப் பணச் செலவு அனாவசியமென்றும் இம்மாநாடு கருதுகிறது. == பூசாரிகளுக்குத் தற்காலம் விடப்பட்டிருக்கும் மானியங்களை ரத்து செய்ய வேண்டுமென்றும் இம்மாநாடு கருதுகிறது. 1930ஆம் ஆண்டிலும் தன்மான இயக்கம், கடவுள் மறுப்பு இயக்கமாக உருக்கொள்ளவில்லை. 41. ஈரோடு மாநாட்டின் முடிவுகள் பெண்களுக்குச் சமஉரிமை வேண்டும் ஈரோட்டில் நடந்த இரண்டாவது மாநில சுயமரியாதை மாநாடு, தன்மான இயக்கத்தின் கொடு முடியாகும் என்று சொல்லலாம். அம்மாநாட்டில் நிறைவேறிய முடிவுகளில் ஒன்று. பெண்களின் திருமண வயதைப் பதினாறு ஆகவும், ஆண்களின் வயதைப் பத்தொன்பதாகவும் சட்டப்படி வரையறுக்க வேண்டு மென்றும் இந்த மகாநாடு வற்புறுத்துகிறது' என்பதாகும். இத்தகைய முடிவு ஏன் தேவைப்பட்டது? நாட்டில் குழந்தை மனங்கள் பெருகியதால், குழந்தை விதவைத் தன்மை மண்டியதால். அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, பெரிய இந்துக் கோயில்களில் பொம்மலாட்டம் நடக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/368&oldid=787209" இலிருந்து மீள்விக்கப்பட்டது