பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 333 டாக்டர் திருமதி முத்துலெட்சுமி ரெட்டி, அவருடைய தங்கை - அப்போது செல்வி நல்லமுத்து, திருமதி ருக்கு மணி லட்சுமிபதி, திருமதி கசின்ஸ் ஆகியோர் இந்த மாநாட்டில் சிறப்பாகப் பங்குகொண்டார்கள். அம் மாநாட்டில் திருமண வயதைப் பற்றி என்ன முடிவு செய்தார்கள்? பெண்களுக்குத் திருமண வயது குறைந்தது பதினாறு: ஆண்களுக்குத் திருமண வயது இருபத்தொன்று. இப்படிச் சட்டம் செய்யவேண்டுமென்று, மாநாடு பரிந்துரைத்தது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் சொத்துரிமை, படிப்புரிமை போன்றவற்றில் சம உரிமை வேண்டுமென்றும் அம்மாதர் மாநாடு முடிவு செய்தது. விவாகரத்து உரிமை வேண்டுமென்பது முடிவெடுக்க, முன்மொழிந்தபோது, பேச்சுகள் காரசாரமாயின. மாநாட்டுத் தலைவர் திருமதி எஸ். சீனிவாச அய்யங்கார், வெகுண்டெழுந்து வெளியேறிவிட்டார். பிறகு, திருமதி கசின்ஸ் தலைமையில் மாநாடு தொடர்ந்து நடந்தது. கடைசியில் விவாகரத்து உரிமை வேண்டும் என முடிவு செய்தார்கள். வேண்டாம் என்றவர்களைப்போல, இரண்டு மடங்கு மாதர்கள், உரிமை கோருதலுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். அம்மாநாட்டின் முன்னணியிலிருந்து, இவ்வுரிமைக்குப் போராடிய எவரும் யான் அறிந்த மட்டில், விவாகரத்து செய்து கொள்ளவில்லை. சீர்திருத்தவாதிகளில் பலர், மற்றவர்கள் துன்பங்களைத் துடைக்கப் போய், பழமை விரும்பிகளின் பழிச்சொற்களையும், யாருடைய நலத்துக்காகப் போராடுகிறார்களோ அவர்களுடைய புரியாமையால் வெடிக்கும் தாக்குதல்களையும் தாங்க நேரிடுவதே, மக்கள் இனத்தின் வரலாறாக உள்ளது. சென்னையில், பெரிய வீட்டு மாதர் திலகங்கள் கூடி, ஏற்ற முடிவுகளைப் பற்றிப் பழிக்காதவர்கள், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கூடி அதே முடிவுகளைச் செய்யும்போது, பதறுவானேன்? அலறுவானேன்? திரித்து உரைப்பானேன்? கண்டனக் கணைகளைப் பொழிவானேன்? வீண் பழிகளைச் சுமத்திச் சுமத்தி வேண்டாத வெறுப்பை வளர்ப்பானேன், முந்தியது, பெரிய இடத்து மாது சிரோன்மணிகளின் பொழுது பாக்கு அறிவு மின்னல்களின் அடையாளம்; அதைச் செயல்படுத்த அவர்கள் இயக்கம் நடத்தப் போவதில்லை. பொதுமக்கள் இயக்கமாக உரு எடுத்த தன்மான இயக்கத்தின் முடிவுகளோ தமிழகத்தின் மூலைமுடுக்கெங்கும் தாக்கும், ஆயிரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/375&oldid=787219" இலிருந்து மீள்விக்கப்பட்டது