பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ_து-கத்தகவடிவேலு 335 கோவை அரசினர் கல்லூரியில் இண்டர்மீடியட்டை முடித்த பிறகு சென்னை மாநிலக் கல்லூரிக்கு வந்து பி.ஏ. (சிறப்பு) வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். நான், அக்காலம் முதல், கடிதப் போக்குவரத்து வைத்துக் கொண்டிருந்த சிலரில் திரு. சின்னசாமியும் ஒருவர். அவர் என்னைக் கோவைக்கு வரும்படி அன்புடன் அழைத்திருந்தார். எனவே, உதகமண்டலத்திற்குச் செல்லும் வழியில், சில நாள்கள் கோவையில் தங்கினேன். o திரு. சின்னசாமியோடு இருந்தேன் அன்றே செல்வர் வீட்டுப் பிள்ளையாகவும் இன்று பல கோடிகளுக்கு அதிபராகவும் விளங்கும் திரு. இரா. வேங்கடசாமி, என் வகுப்பு மாணவர். எனக்கு நெருங்கிய நண்பர். அவரும் என்னை அழைத்திருந்தார். ஆயினும் சாதாரண வீட்டில் தங்குவதிலேயே என் நாட்டம் சென்றது. திரு. சின்னசாமியோடு நான் தங்கிய சில நாள்கள் மறக்க முடியாதவை. எங்கள் வீட்டில் இருப்பது போன்றே உணர்ந்தேன். திரு. சின்னசாமியின் பெற்றோர்களும் கனிவோடு விருந்தோம் பினர். அவர்களுக்கு நான் முன்போபின்போ செய்தது ஒன்றும் இல்லை. அவர்களுக்குக் கடன்பட்டிருக்கிறேன். திரு. சின்னசாமி என்னை அழைத்துக் கொண்டு போய், கோவையின் பல பகுதிகளைக் காட்டினார். திரு. வேங்கடசாமிக்கு உரிய இராமகிருஷ்ணா நூற்பு ஆலையையும் பார்த்தேன். அப்போதுதான் ஆலையொன்றை நான் முதன்முறையாகக் கண்டேன். பிற்காலத்தில் நாங்கள் மனிதர்களாவோம்; பலர் எங்களை அழைத்து, பல ஆலைகளையும் தொழிற்சாலைகளையும் காட்டி 'கிழ்வர் என்பது எங்களுக்கு அப்போது தெரியாது. உாணயமும் நேர்மையும் எங்கள் குருதியில் ஓடின மேற்கொண்ட எதையும் பொறுப்போடு செய்து முடிக்க வேண்டும் 'அம் கடமை உணர்வைப் பெற்றோரிடம் இருந்து பெற்று இருந்தோம். நாணயம், நேர்மை எங்களுக்குத் தெரியாமலே, எங்கள் குருதியில் ஒடிக்கொண்டிருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/377&oldid=787221" இலிருந்து மீள்விக்கப்பட்டது