பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 343 தணிகை என் நண்பர். ஆயினும் அவர் அப்பா, என் ஆசிரியர் ஆயிற்றே. முன் அறிவிப்பு இன்றித் திடுதிப்பென அவர் வீட்டிற்குச் சென்று பெட்டி பேழைகளோடு நிற்கக் கூசினேன். என் வகுப்பிலும் விக்டோரியா மாணவர் விடுதியிலும் ன்னக்கு நெருக்கமாயிருந்த நண்பர், தி.அ. இராமகிருஷ்ணன் என்பவர், கோடை விடுமுறையைக் கழிக்க நீலகிரி வந்திருந்தார். அவர் முகவரி என்னிடம் இருந்தது. முதலில் அவர் இல்லத்திற்குச் செல்ல முடிவு செய்தேன். 'பொன்குன்று இரயில் நிலையத்தில் இறங்கினேன். படுக்கையையும் பெட்டியையும் ஒர் ஆளிடம் கொடுத்தேன். நான் குறிப்பிட்ட முகவரிக்கு அந்த ஆள் என்னை அழைத்துக் கொண்டு போனார்.... அவர் பின்னே நடந்தேன். நண்பரின் வீடு உயர்ந்த மேட்டில் இருந்தது. மேடு ஏறும் போது மூச்சு திணறியது. சும்மா நடந்த என் பாடே அப்படியென்றால், சுமையையும் துக்கிக் கொண்டு, குன்றேறிய ஆளின் நிலை எப்படி இருந்திருக்குமென்பதை ஊகித்துக் கொள்ளுங்கள். திரு. இராமகிருஷ்ணன் வீட்டை அடைந்தபோது, அவருடைய தந்தை திரு. அருனாசல முதலியாரும் அங்கிருந்தார். அவர் எனக்குப் பழக்கமானவர்; ஆர்வத்தோடு வரவேற்றார். விரைந்து சாப்பாடு போடச் செய்தார். அன்று மாலை, திரு. இராமகிருஷ்ணன் என்னை உதகைக்கு அழைத்துச் சென்றார். முதலில் திரு. தணிகை வீட்டிற்குச் சென்றோம்; அவரைக் கண்டோம். நான் யார் வீட்டில் தங்குவதென்பதைப் பற்றி அவர்கள் விவாதித்தார்கள். திரு. தணிகையின் விருந்தாளியாக, சைவ ஒட்டலில் தங்கினேன்; -டுப்பிக்காரர்கள் நடத்திய ஒட்டல்; தூய்மையாக வைத்திருந்தார்கள். காலையும் மாலையும் திரு. தணிகையும் திரு. இராமகிருஷ்ணனும் வந்து என்னை அழைத்துக் கொண்டு போய் எனக்குப் பல இடங்களைக் காடடினார்கள். உதகையின் குளுமையும் இயற்கைக் காட்சிகளும் நட்புறவும் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தின. மீண்டும் 5০০re 'ஆ நான்கு நாள்கள் இன்பமாகக் கழிந்தன. பிறகு, இரவில் ஆ = 置 - -- 圖鬥 = ■ னாக்கண்டேன். துடித்து எழுந்தேன்; விடியலுக்காகக் காத்திருந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/385&oldid=787230" இலிருந்து மீள்விக்கப்பட்டது