பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

345 நினைவு அலைகள் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற தமக்கே இடம் இடைத்திருக்கையில், அதைவிட நிறைய மதிப்பெண்கள் பெற்ற எனக்கு இடம் கிடைத்திருக்கும் என்று நம்புவதாகவும் எழுதியிருந்தார். தாம் பல பாடங்களிலும் பெற்ற மதிப்பெண்களையும் எழுதியிருந்தார். சென்னையில் தாம் சில நாள்கள்வரை தங்கிவிட்டு, பிறகு ஊருக்குச் சென்று, கல்லூரி திறப்பதற்கு முந்திய நாள் வரப்போவதாக எழுதியிருந்தார். இதை என் தந்தையிடம் காட்டினேன். நான் சென்னைக்குச் சென்று இது பற்றிக் கேட்டுவர வேண்டுமென்று ஆணையிட்டார். அப்படியே சென்றேன். தக்காளின் பரிந்துரை திரு. இராமகிருஷ்ணனைக் கண்டுபிடித்துக் கேட்டேன். அவர் எதையும் என்னிடம் ஒளிக்கவில்லை. தம் தந்தை, பிரபல வழக்கறிஞர் திரு. வி.எல். எதிராசை நண்பர் ஒருவர் வழியாகப் பிடித்தார். அவர் அப்போதைய மாநிலக் கல்லூரி முதல்வர் திரு. நெவெரல் ஸ்டேதத்திற்கு நெருங்கிய நண்பர். எனவே, திரு. எதிராசின் பரிந்துரை பலித்தது. சாதாரண மதிப்பெண் பெற்றிருந்த தமக்குச் சிறப்பு வகுப்பில் இடம் கிடைத்தது என்றார். அது மட்டுமல்ல; எங்கள் இருவருக்குமே நல்ல நண்பராகிய, திரு. சொக்கலிங்கத்திற்கும் இடம் கிடைத்து விட்டது. அவருடைய மதிப்பெண்களும் என் மதிப்பெண்களை எட்டா. காலம் தாழ்த்தாது உடனே தக்கார் பரிந்துரையைத் தேடிக் கொண்டு வந்தால், எனக்கும் மாநிலக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று இராமகிருஷ்ணன் ஆலோசனை கூறினார். நெய்யாடு பாக்கத்திற்குத் திரும்பிச் சென்றேன். கேட்டதைச் சொன்னேன். என் அம்மான் திரு. சுந்தரசேகரன் என் தந்தையையும் என்னையும் அழைத்துக் கொண்டு, செங்கற்பட்டிற்குச் சென்றார். மேலமையூர் வேதாசல முதலியாரைக் கண்டார். இருவரும் உண்மையான நண்பர்கள். செங்கற்பட்டு மாவட்ட ஆட்சிக் குழுவில் ஒரே உறுப்பினர்கள். எனக்கு எப்படியும் இடம் வாங்கிக் கொடுக்க வேண்டுமென்று என் மாமா கேட்டதும் திரு. வேதாசலம் அரைமணியில் காரில் சென்னைக்குப் புறப்பட்டார். எங்களை அழைத்துக் கொண்டு போனார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/388&oldid=787234" இலிருந்து மீள்விக்கப்பட்டது