பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/524

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 481 திருப்பெரும்பூதூரில் உதவிப் பஞ்சாயத்து அலுவலராக இருந்த போது. அந்நெருக்கடி எப்படி வந்தது? திருப்பெரும்புதூருக்கு எட்டு ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் செங்காடு என்னும் சிற்றுார் இருக்கிறது. அக்காலம் அவ்வூரில் பஞ்சாயத்துப் பள்ளியொன்று இருந்தது. அதன் தலைமையாசிரியர் ஒர் அய்யர், நல்ல மனிதர் நாணயமானவர். மாவட்ட ஆட்சிக்குழுவின் தொடக்கப்பள்ளியில் அய்ம்பத்து அய்ந்து வயதில் ஒய்வு பெற்றதும் இப்பஞ்சாயத்துப் பள்ளிக்கு வந்தார். அக்காலத்தில் பொதுவாக ஆசிரியர் சமுதாயமும் குறிப்பாகப் பஞ்சாயத்துப் பள்ளி ஆசிரியர்களும் பட்டபாடு கொஞ்சமல்ல. தொடக்கப் பள்ளிகளை மாவட்ட ஆட்சிக்குழுக்கள் சில காலம், வட்ட ஆட்சிக் குழுக்கள் சிலகாலம் நடத்தும். அவற்றில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு ஆட்சிக்குழுவின் நிதி நிலைமைக்கு ஏற்ப இரண்டொரு திங்கள் முன் பின்னாகச் சம்பளம் வரும். ஆசிரிய சமுதாயத்தில் அவர்கள் நிலை பரவாயில்லை. தனியார் நடத்திய தொடக்கப்பள்ளிகள் நிறைய உண்டு. அங்கு வேலை செய்த ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறையே சம்பள மானியம் வழங்க வேண்டும். இவ்விரு துறையினரும் தொடக்கப்பள்ளி நடத்த முன்வராத சிற்றுார்களில், தொலைவூர்களில், பஞ்சாயத்துப் பள்ளிகள் நடப்பதுண்டு. பள்ளிகளே இல்லாத ஊர்களோ பதினாயிரக்கணக்கில் இருக்கும். பஞ்சாயத்துப் பள்ளி ஆசிரியர்களுக்குச் சம்பளம் எப்போது கிடைக்கும் முதல் ஆறு திங்கள் வேலை செய்த அறிக்கை ஆய்வாளரால் தணிக்கை செய்யப்பட்டு மேலிடத்திற்குப் போன பிறகே, மேல் இடம் எது? பஞ்சாயத்துகளின் தலைமை ஆய்வாளரின் அலுவலகம் ஆகும். பள்ளி ஆய்வாளர், தணிக்கை அறிவிப்பை மாவட்டக் கல்வி யதிகாரிக்கு அனுப்புவார். அவர் பஞ்சாயத்து இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு அனுப்புவார். இதற்குள் எட்டு ஒன்பது மாதங்கள் ஆகிவிடும். பிறகு சம்பள மானிய ஆணை பிறப்பிக்கப்படும். அதைக் கொண்டுபோய், வட்டக் கருவூலத்தில் காட்டி, பணத்தைப் பெற்று வரவேண்டும். - முதலில் ஒன்பது பத்துத் திங்கள் பாக்கியைப் பெறுவார்கள். பின்னர் திங்கள் தோறும் குறிப்பிட்ட நாளன்று வட்டக் கருவூலத்திற்குச் சென்று பணத்தைப் பெற்று வரவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/524&oldid=787434" இலிருந்து மீள்விக்கப்பட்டது