பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/526

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 483 பாரதப் புதல்வனின் புலம்பல் பாரதத் தாயே! நீ முன்னாள் பெற்று இருந்த உயர்வென்ன! இன்னாள் பெற்றுள்ள தாழ்வென்ன சுதந்திரத்துடன் சுற்றித் திரிந்த நீ, இன்று அடிமைச் சிறையில் அவதிப்படுகிறாய். ஒழுக்கம், தத்துவம், இலக்கியம், இசை, ஓவியம், சிற்பம் முதலிய அருஞ்செல்வங்களை வரையாதளித்த நின் வள்ளன்மை எங்கே? உன் பண்டைச் செழிப்பும் கொழிப்பும் எங்கே? எல்லாமிழந்து பண்டைச் சிறப்பிலேயே நின் தாழ்வை மறைக்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டனையே! நின் அன்றைய உயர்வுக்குக் காரணம் என்ன? இன்றைய தாழ்விற்கு வித்து என்ன? அந்நியர் ஆட்சியும் சூழ்ச்சியும் நின் தாழ்வின் காரணம் என்பார் ஒரு 4FrTITITrr. நின் ஜாதி மத பேதம் என்பார் மற்றோர் சாரார். இருவர் வாதத்திலும் உண்மை உள்ளது. எனினும், நிதானமாக யோசித்தால் வேறொரு முக்கிய காரணம் இருப்பதையும் அறிவோம். உன் உயர்வின் காரணம் உன் பண்டைப் புதல்வரின் 'மெளனம். தாழ்வின் காரணம் உன் இக்காலப் புதல்வரின் வெறும் வாய் வீச்சு. உன் பண்டைப் புதல்வர் ஆழ்ந்த ஆலோசனைக்காரர்களாகவும், தாங்கள் கண்ட முடிவுகளை வீண் படாடோபம் இன்றி உலகிற்கு வெளியிடுவோராயும் இருந்தனர். வெறும் ஆரவாரப் பிரியர்களல்லர். அருஞ்செயலாற்றும் வீரர்களாயிருந்தனர். அதனாலன்றோ இன்றைக்கும் பல நாட்டார் மெச்சி விரும்பிப் பின்பற்றும் அரும்பெருஞ் செயல்களைப் பல துறைகளிலும் இயற்ற முடிந்தது. வெறுங் கூச்சலிடுவோர்களாகவோ, வாய் வீரர்களாகவோ மாத்திரம் இருந்திருப்பார்களானால் நீ அத்துணைப் பெருமைகளையும் அவர்களால் மெச்சப் பெற்றதும், உலக மக்களில் பெரும்பாலரது மதிப்பையும் வியப்ன் பயும் கவர்ந்ததுமான புத்த சன்மார்க்கத்தை நீ ஈன்றளித்தது எதனால்? நின் அரும்புதல்வனின் ஒப்பிலா மணியின் ஆழ்ந்த சலியாத சிந்தனையாலன்றோ? வெறும் படாடோப வாயாடித்தனத்தால் அல்லவே! L. அவ்விதமே தங்கள் சக்திகளை ஒன்று திரட்டி ஆழ்ந்த யோசனையிலும், உயரிய செயல்களிலும் சலியா உழைப்பிலும் செலுத்தி வந்த கர்மயோகிகள் பலரைப் பெற்றெடுத்தாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/526&oldid=787436" இலிருந்து மீள்விக்கப்பட்டது