பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தாவடி வேலு 15 'என்.டி. எஸ். பேசியது நன்றாயிருந்தது என்று எங்களிடம் பாராட்டினார்' என்பதாக என்னுடன் காரில் வந்த உள்ளுர்த் தோழர்கள் கூறினார்கள். உழைப்பால் உயர்ந்த ஏ. ஆர். ஆர். சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, தொடக்கத்தில் இதையும் அதையும் தொடங்கி விட்டுவிட்டு, பிறகு ஏ.ஆர்.ஆர். சீவல் தொழிலை நிறுவி, அதை இயந்திர மயமாக்கி, வெற்றி பெற்றவர் திரு. ஏ.ஆர். இராமசாமி. உழைப்பால் உயர்ந்த அவர், பழகுதற்கு இனியவர். அகந்தை அற்றவர். செல்லும் வழியெல்லாம் உதவி செய்பவர். நல்ல பொதுத் தொண்டர். காழ்ப்புணர்ச்சி இல்லாதவர். பல கட்சியினரிடமும் மதிப்பைப் பெற்றவர். கும்பகோணம் மாநகராட்சியின் தலைவராக விளங்கியவர்: ஐந்தாண்டுகள் சென்னைச் சட்டமன்ற உறுப்பினராகத் தொண்டாற்றியவர். தமிழ் நாட்டில் நிகழ்ந்த அற்புதங்களாகிய பள்ளிக்கூடப் பகல் உணவுத் திட்டம், இலவசச் சீருடை வழங்கல், பள்ளிச் சீரமைப்பு ஆகியவற்றில் ஆதரவாக நின்றவர். கும்பகோணத்தில் அரசினர் பெண்கள் கல்லூரி அமைவதற்குத் துணைபுரிந்தவர். அப்போது,அப்போது செய்த அறங்களோடு நிற்காமல், நான்கு ஆண்டுகளுக்குமுன் அறக்கட்டளை ஒன்றை நிறுவியவர். அதன் வழி நர்சரிப் பள்ளி ஒன்றைத் தொடங்கி நன்முறையில் நடத்தி வருபவர். 'அறத்தான் வருவதே இன்பம்' என்பதை உணர்ந்து வாழ்ந்து வரும் திருவாளர் ஏ.ஆர். இராமசாமிக்கு 11-1-77 அன்று மணிவிழா. கல்வி வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய தொண்டினை நினைவுகூர்ந்து அவருக்கு நன்றியும் வாழ்த்தும் கூறுவது கடமை என்று கருதினேன். எனவே, அவரது அன்பு நிறைந்த அழைப்பை ஏற்று அவருடைய மணிவிழாவில் பங்குகொண்டேன். அப்போதுதான், என்னையே குறிவைத்து எய்ததுபோல் பற்றி எரியும் காகிதப் பூமாலைகள் இரண்டுமுறை என்மேல் பாய்ந்தன. திருவாளர் ஏ. ஆர். இராமசாமியின் மணிவிழாவிற்குச் சென்றபோது, திருவாளர்கள் மஞ்சக்கொல்லை திருநாவுக்கரசு முதலியார், கடலூர் நாராயணசாமி நாயுடு ஆகியோருடன் திரு. காசிராமனும் புகைவண்டி நிலையத்திற்கு வந்து என்னை அன்போடு உபசரித்து அழைத்துக் கொண்டு போனார். தம் விருந்தினர் இல்லத்தில் என்னை அன்போடு கவனித்துக் கொண்ட திரு. காசிராமன், மாலைப் பொழுது அங்கே வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/57&oldid=787525" இலிருந்து மீள்விக்கப்பட்டது