பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/579

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53Ꮾ நினைவு அலைகள் 1939 செப்டம்பரில் இட்லர், இரண்டாவது உலகப்போரைத் தொடங்கினான். அன்றைய இந்திய அரசு, ஆங்கிலேயரின் ஆட்சி. எனவே, இந்திய அரசு, இட்லருக்கு எதிராக, பிரிட்டனுக்கு ஆதரவாக, இந்தியா போரிடும் என்று திடீரென்று அறிவித்தது. இந்திய மக்களின் கருத்தறியாமல் எடுத்த இம்முடிவை எதிர்க்கும் Ə-g | GEYY [ LL/ MTøYTLD FTeHF , மாநில காங்கிரசு ஆட்சிகள், பதவி விலகவேண்டுமென்று அனைத்திந்திய காங்கிரசு முடிவு செய்தது. அதையொட்டி, திரு. இராஜகோபால ஆச்சாரியார் அமைச்சரவை விலகிவிட்டது. அப்புறம் ஆளுநர் கட்டாய இந்திப் பாடத்தை எடுத்து விட்டார்; விரும்புகிறவர்கள் மட்டும் படிக்கலாம் என்று ஆணை பிறப்பித்தார். விளைவு என்ன? இளம் பிள்ளைகளுக்குக் கட்டாய இந்தி - அதை எதிர்த்துப் போராட்டம் - இவற்றின் விரிந்த விளைவு என்ன? அனைத்திந்திய பகுத்தறிவு, சமத்துவ சமதர்மக் கட்சி 'யாக வளர்ந்திருக்க வேண்டிய தமிழ்நாட்டுச் சுயமரியாதை இயக்கம், அவ்வாய்ப்பினை இழந்தது. பெரியார் சுயமரியாதை சமதர்மத் திட்டத்தை உருவாக்கியது அதனால் ஈர்க்கப்பட்டு திரு. ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஈரோட்டிற்கு வந்து தங்கி, பெரியாரோடு கலந்துரையாடினார். பெரியாரை அனைத்து இந்திய சமதர்மக் கட்சியில் சேர்ந்து பணிபுரியும் படி அழைத்தார். சாதியொழிப்பு, இந்தியாவின் தேவை. மூட நம்பிக்கையொழிப்பும் அப்படியே. சமதர்ம முறை இந்தியாவின் எந்தப் பகுதிக்குத் தேவையில்லை? சென்னை மாகாண நோய்களைக் களைவதிலேயே சிக்கிக் கொண்டதற்குப் பதில் பெரியார் இயக்கம், அனைத்திந்திய மாறுதலில் முனைந்திருந்தால், வட இந்தியாவில் நாள்தோறும் நிகழும் சாதிக் கொடுமைகள் குறைந்திருக்கும். அங்கும் சாதிக்கட்டுகள் தளர்ந்து, மூடநம்பிக்கைகள் குறைந்து, சமதர்ம உணர்வு அதிகரித்திருக்கும். இப்படிப்பட்ட நிலை உருவாகக் கூடாதென்றே, கட்டாய இந்தியை, தவறான பருவத்தினருக்குத் திணிக்கப்பட்டதோ? நம் மேல் திணிக்கப்பட்ட கட்டாய இந்தி, எதிர்ப்பைக் கிளப்பி, வட இந்திய முற்போக்காளர்களும் சமதர்மிகளும் தமிழக முற்போக்காளர் களும் சமதர்மிகளும் ஒரே அணியில் நின்று செயல்பட முடியாதபடி ஒரு பிளவை ஏற்படுத்தி விட்டது. இது தமிழ்நாட்டுப் பகுத்தறிவு வாதிகளுக்கு இழப்பு. வடநாட்டுப் பகுத்தறிவு வாதிகளுக்கும் இழப்பே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/579&oldid=787537" இலிருந்து மீள்விக்கப்பட்டது