பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/593

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

550 நினைவு அலைகள் விசாரணை தொடங்கிற்று. முதலில் சின்னஞ்சிறு புகார்களை ஆய்ந்தேன். அவற்றிற்கு ஆதரவாகப் புகார் செய்தவர்கள் காட்டிய சான்றுகளைப் புரட்டிப் பார்த்தேன். அவற்றில் சில, குறைகளே ஒழிய, குற்றங்கள் அல்ல. - அம்முடிவை வெளிப் படையாகவே கூறியபோது, மனுஎழுதியவர் களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது; ஆயினும் மறுக்க இயலாது அமைதி காத்தனர். பஞ்சாயத்தின் பதிவேடுகளில் உரிய குறிப்புகளைக் கண்டபோது, ஆங்காங்கே, அவற்றைத் தணிக்கை செய்ததை என் கைப்பட எழுதி அதில் கையெழுத்திட்டேன். முதல் நாள், விசாரணை முடியும்போது, நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் துடிக்கும்படி எக்குற்றச்சாட்டும் மெய்ப்பிக்கப் படவில்லை. அன்றிரவு வங்கி மாடியில் தங்கினேன். பகல் உணவும் இராச் சாப் பாடும் துணைப்பதிவாளர் திரு. குழந்தைவேலு வீட்டிலிருந்து வந்தன. இடைவேளை காப்பி, சிற்றுண்டிச் சாலையிலிருந்து வாங்கிக் கொண்டேன். முதல் இரவு, என் ஊழியர்மட்டும் அல்லாது, திரு. குழந்தைவேலுவின் ஊழியர்கள் இருவரும் எனக்குக் காவலாக இருந்தார்கள். எனவே, அச்சம் இன்றி அமைதியாக உறங்கினேன். இரண்டாம் நாள் விசாரணையிலும் அதிகக் குற்றங்கள் வெளியாக வில்லை; சிற்சில தவறுகள் தென்பட்டன. அவற்றைக் குறித்துக் கொண்டேன். அதற்கான ஏடுகளில் எண்களை எழுத்தாலும் எழுதிக் கையெழுத்திட்டேன். மூன்றாம் நாள் விசாரணையும் 'சப் பென்று தொடங்கிற்று: புரட்டுகள் புலனாகவில்லை. எதிர்க் கட்சியினருக்கு ஆற்றாமை; ஆள்பவர்களுக்குத் தெம்பு கொப்பளித்தது. அதன் விளைவு? பிற்பகல் விசாரணையைத் தொடங்கும்போது, ஆராவமுது அய்யங்கார் தம் இயல்பைக் காட்டிவிட்டார். 'நாங்கள் பஞ்சாயத்திலிருந்து பணம் சம்பாதிப்பதாகச் சொல்லு பவர்கள், 'தேவடியாள்களுக்குப் பிறந்தவர்களாகவே இருக்க வேண்டும்' என்று உரக்கக் கத்தி, வலுச்சண்டைக்கு இழுத்தார். அதே நொடி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள்துள்ளி எழுந்தார்கள். 'என்ன சொன்னாய்?' என்று கத்திக் கொண்டே அய்யங்கார் மேல் பாய்வதுபோல் நின்றார்கள். மின்னலெனக் குறுக்கிட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/593&oldid=787553" இலிருந்து மீள்விக்கப்பட்டது