பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/625

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

582 நினைவு அலைகள் அந்நோட்டுகளைத் திருட்டுத்தனமாக அச்சிட்டவர், 'நான் அல்ல' என்று சொல்லிவிட்டு வாளாவிருப்பது நாணயமான செயல் அல்ல என்று என் எண்னத்தில் பட்டது. ஆரியர் புகுத்தியது என்று பழி சொல்லிவிட்டு, நாம் சும்மாயிருப்பது தவறு என்று எண்ணினேன். அது எப்படிச் செயல்பட்டது என்று கூறுவதற்கு முன்னர், இந்த மாநாட்டில் நடந்த சிரிப்பிற்கிடமான நிகழ்ச்சி யொன்றைக் குறிக்க விரும்புகிறேன். சோழவளநாட்டின் விருந்தோம்பலைப் பற்றிக் கேட்க வேண்டுமா? சிறப்பான விருந்துகளை உண்டோம். திருவாரூர் நகராட்சித் தலைவராக விளங்கிய, பா.வா. கோபால்சாமி முதலியார் என்பவர், தம் செலவில் ஒவ்வோர் வேளையும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு விருந்தளித்தார். ஒரு பகல் உணவின்போது, நான் அவருடைய விருந்தில் கலந்து கொள்ள நேர்ந்தது. அப்பெரியவரே வந்திருந்து நீண்ட பந்திகளைக் கவனித்தார். சுவையான உணவு வகைகளை வயிறு நிறைய உண்டேன். பரிமாறுவோர் பலாப்பழப் பாயாசத்தை இருமுறை திணித்தார்கள். இரண்டாம் முறை குடித்து முடிக்கும் வேளை, பா. வா. கோபால்சாமி முதலியார் என் எதிரே வந்து நின்றார். என்னை அவரக்குத் தெரியும். எவ்வளவு சொல்லியும் கேட்காது, மூன்றாம் தொன்னை பாயாசத்தை ஊற்ற வைத்தார். அங்கிருந்து நகரமால் நின்றபடியே என்னைக் குடிக்கவும் வைத்தார். திக்கு முக்காடியபடியே குடித்தேன். சில மணித்துளிகளில் விருந்து முடிந்தது. நான், கைகழுவும் வேளை, அதிகமாக உண்டதால், வாந்தியெடுத்து விட்டேன்; பலருடைய பரிதாபத்திற்கு ஆளானேன். பா.வா. முதலியாரும் என்னிடம் வந்து, 'மருத்துவரை அழைத்து வரட்டுமா? என்று கேட்டார். ஆனால், மருந்து இல்லாமலே சமாளித்ததேன். திருவாரூர் மாநாட்டின்போது, 'என் சாதி' என்று சொல்லப்பட்ட பல நண்பர்களைக் கண்டேன். பெரும்பாலோர் என் திருமணத்தைப் பற்றிக் கேட்டு நச்சரித்தார்கள். இங்கும் அங்கும் ஏற்ற பெண்கள் இருப்பதாகச் சொல்லி, எனக்கு உதவ முன் வந்தார்கள். என்னுடைய ஊமைத்தனம் அவர்களிடம் எரிச்சலை வளர்த்தது. இப்படி எரிச்சல் கொண்டவர்கள் நாளுக்கு நாள் பெருகக் கண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/625&oldid=787589" இலிருந்து மீள்விக்கப்பட்டது