பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/634

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 591 எங்கள் திருமணத்தைப் பற்றிப் பெரியாரோடு பேசி அவர் ஒப்புதல் பெற்றது. செப்டம்பர் திங்களில். ஆசிரியப் பயிற்சியோ ஏப்ரல் திங்களில்தான் முடியும். அதுவரை திருமணத்தை ஒத்திப்போட, பெண் வீட்டார் விரும்பவில்லை. முயற்சி திருவினையாக்கும். முயற்சியில் நம்பிக்கையுடைய என் மாமனார் திருவாரூர் சுப்பிரமணியம் தம் மூத்த மகள், ஏற்கெனவே ஆசிரியையாகப் பணிபுரிந்து கொண்டிருந்த திருமதி. குஞ்சிதத்தை அழைத்துப்போய் வெல்லிங்டன் சீமாட்டிப் பயிற்சிக் கல்லூரி முதல்வர், செல்வி ஜெராட், என்னும் ஆங்கில மாதுடன் பேசினார். அந்த அம்மையார், பொறுமையாகக் காது கொடுத்தார். அவருக்குச் சட்டதிட்டம் தெரிந்த அளவு, மனித இயலும் இந்திய வாழ்க்கை முறையும் தெரிந்திருந்தது. ஆராய்ச்சிப் பட்டம் பெற்ற ஒர் இந்தியப் பெண்மணிக்குத் தக்க கணவன் கிடைப்பதில் உள்ள அருமைப்பாடும் நன்கு தெரியும். எனவே, வெட்டு ஒன்றுதுண்டு இரண்டு என்னும் போக்கிலே பேச்சை முடித்து விடவில்லையாம். சிந்தித்துச் சொல்வதாகப் பதில் கூறி அவர்களை அனுப்பினாராம். சில நாள்களுக்குப்பின் என் மாமனார், மீண்டும் கல்லூரி முதல்வர் செல்வி ஜெராட்டைக் கண்டார். 'இத்தகைய அனுமதி கொடுப்பது, வழக்கமில்லை. இருப்பினும் இம்முறை விதிவிலக்குத்தர எண்ணுகிறேன். ஆனால் ஒரு நிபந்தனையின் பேரில், திருமணம் செய்து கொண்டாலும்' ஆசிரியைப் பயிற்சி முடியும் வரை கருவுறுவதில்லை என்று உறுதியளிப்பதாயின், அனுமதி கொடுப்பேன். அவ்வுறுதியை மீறினால், கல்லூரியிலிருந்து நீக்க நேரிடும்' என்று கணிவையும் கண்டிப்பையும் கலந்து கொடுத்தார் கல்லூரி முதல்வர். வேறு வழியின்றி அதற்கும் உறுதி அளித்து, திருமணம் ஒப்புதல் பெற்றதாகக் கேள்விப் பட்டேன். திருமணமாகியும் பிரம்மசாரி திருமணம் பதிவானாலும் இல்வாழ்க்கையைத் தள்ளிவைக்க வேண்டும் என்பது புரிந்தது. ஏமாற்றமோ, அதிர்ச்சியோ கொள்ளவில்லை. "எதற்கும் ஆயத்தமாயிருக்க வேண்டும்' என்று சாரண இயக்கம் எனக்குக் கற்றுத் தந்திருந்தது. 'திருமணமாகியும் பிரம்மசாரி என்னும் நாட்டு வழக்கும் தெரியும். அதுவரை அது நமக்கல்ல, என்று எண்ணி இருந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/634&oldid=787600" இலிருந்து மீள்விக்கப்பட்டது