பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/719

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

678 நினைவு அலைகள் தமிழ் நாட்டில் உள்ள கோயில்கள் அளவு, பரப்பும், உயரமும் கொண்ட கோயில்கள் இந்தியாவின் பிற பகுதிகள் அனைத்தையும் சேர்த்தாலும் இல்லை. --- நாம் செலவு செய்யும் அளவு விழாச் செலவை, பிற பகுதி இந்துக்கள் செய்வதும் இல்லை. வட இந்தியர்களின் திருமணச் செலவு நம் அளவா? இல்லை. மாலை ஆறு மணிக்குத் திருமணம் என்பார்கள். மூன்று மணிக்கு துணிப்பந்தல் எழுப்புவார்கள். அய்ந்தாறு மணிக்குள் வைத்துவிடுவார்கள். கேரள இந்துக்கள் திருமணச் செலவுகூட, நம்மிலும் கட்டுப்பட்டது. நாம் செய்யும் அளவு செலவு தேவைதானா? இப்போது மூன்று நாள் திருமணம் என்ற முட்டாள்தனம் இல்லை. இரண்டு நாள் திருமணம். அதில் மாப்பிள்ளை அழைப்பு வேறே! அதோடு வரவேற்பு என்று காசைக் கரியாக்குவதில் இன்றும் குறையவில்லையே. இதில் நம்மை மிஞ்சுவார் இல்லை. புரோகிதமற்ற திருமணம் செய்து கொள்வோர்கூட மாப்பிள்ளை அழைப்பு தடபுடலை விடாவிட்டால், மக்கள் எப்போது திருந்துவார்கள்? புரோகிதமற்ற திருமணம்; ஆனால் வரதட்சனை வாங்கும் திருமணம் என்றால், இச்சமுதாயம் கடைத்தேறுவது எப்படி? எப்போது? தீபாவளி, பொங்கல், கிறுத்துமசு போன்றவை ஆண்டுதோறும் வரும்பண்டிகைகள் திடீர் விபத்துகளுமல்ல; விழாவுமல்ல. காலம் காலமாகப் பழகிப்போன, இப்பண்டிகைகளுக்கும் ஊழியர்களுக்கு முன்பணம் கடனாகக் கொடுக்க வேண்டியிருக்கிறதே! இப்படி வாழலாமா? சிக்கன வாழ்க்கை போகாறு அகலாக்கடை என்ற வாழ்க்கை நெறியைப் பெரியாரிடம் நான் கற்றிருந்ததால், ஆகாறு சிறிதே ஆயினும் அய்ம்பத்தாறு ரூபாய்களில், குடித்தனம் பண்ண முடிந்தது. விருந்தளிக்கவும் முடிந்தது: கடன்படாமலும் நிம்மதியாக வாழ முடிந்தது. அரசு, பற்றாக்குறை வரவு செலவுக் கணக்கைத் தொடர்ந்து போட்டு, ஒவ்வோர் ஆண்டும் துண்டு விழும் அளவிற்கு நோட் அச்சடித்துக் கொள்வதும், தனியாள் - பக்தனோ - பகுத்தறிவாளனோ - வரவுக்கு மீறிச் செலவு செய்வதும், அடுத்தடுத்து எதிலாவது கடன் வாங்குவதும் பெருந்தீங்கு. இது எனக்குத் தெரிந்தால் போதுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/719&oldid=787717" இலிருந்து மீள்விக்கப்பட்டது