பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 நினைவு அலைகள் - நான், சட்டென்று பிரம்பைப் பிடுங்கினேன். அதை ஆசிரியர் எதிர்பார்க்கவில்லை. அந்நேரம்வரை அடக்கமான மாணவன். எனவே ஆசிரியர் திகைத்துப் போனார். நல்ல மாட்டுக்கு ஓர் அடி ஆசிரியர் கையில் இருந்த பிரம்பு, இமைப்பொழுதில் என் கைக்குள் சிக்கிக் கொண்டதால் ஏற்பட்ட திகைப்பில் இருந்து ஆசிரியர் மீள்வதற்கு முன், நான்பிரம்பை ஆட்டி, அவரை மிரட்டினேன்; ஆனால் வாய் பேசவில்லை. அடுத்த நொடியில் பிரம்பைக் கீழே போட்டுவிட்டு ஒடினேன்; ஒடினேன் தலைதெறிக்க ஒடினேன். குளிக்கச் சென்ற என் தாத்தா, தம் வீட்டிற்குத் திரும்பி வருவதற்கு முன்பே நான் என் தாய் வீட்டிற்குச் சென்றேன். கதறி அழுதேன். என் மேல் ஒரடியும் விழவில்லை யென்பதைத் தாயார் தெரிந்து கொண்டார். செல்லப் பிள்ளையாகிய என்னைக் கண்டிப்பதா எனக்காக, என் தாத்தாவோடு சண்டைக்குப் போவதா? ஆசிரியருக்கு, மிரட்டக்கூட உரிமை இல்லையென்று அவரைக் கடிந்து கொள்வதா? இருதலைக் கொள்ளி எறும்பின் நிலை என்பார்களே, அந்நிலைக்குத் தள்ளிவிட்டேன் என் பெற்றோர்களை. அவர்கள் எது சரி, எது தப்பு என்று முடிவு சொல்லவில்லை. 'ஒவ்வொன்றிலும் சரி தப்பு சொல்லத் தேவையில்லை என்னும் வாழ்வியல் தெளிவு, என் பெற்றோர்களிடம் இருந்தது. எப்படியோ என்னை அமைதிப்படுத்தினார்கள். அடுத்த சில நாள்கள் பள்ளிக்கூடம் இல்லை, ஆசிரியர் கதிர்வேலு நெய்யாடிவாக்கம் கிராமத்திற்குள் கால் எடுத்து வைக்கவில்லை. என் தந்தை 'உம்' என்று இருந்தார். வீட்டில் மற்றவர்களும் என் படிப்பைப் பற்றிப் பேச்சு மூச்சு விடவில்லை. சில நாள்களுக்குப் பிறகு மீண்டும் திண்னைப் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. ஆசிரியர் அங்கிருந்தபடியே, சகமானவன் ஒருவனை என் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அவன் என்னைப் பள்ளிக்கு அழைத்தான். 'உன் முரட்டுத்தனம் அவர் வெகுளியைப் பற்றவைத்து விட்டது. 'நம் ஊரில் யாருக்கும் பாடஞ்சொல்ல மாட்டேன், என்று சொல்லிவிட்டு நின்று விட்டார். 'யார் யாரையோ கொண்டு சொல்ல வைத்தோம். கதிர்வேலுவின் பெருந்தன்மை, நடந்ததை எல்லாம் மறந்துவிட்டார். மறுபடியும் பள்ளிக்கூடம் நடத்த இசைந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/74&oldid=787740" இலிருந்து மீள்விக்கப்பட்டது