பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/743

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

702 நினைவு அலைகள் போகிறேனென்று எழுதிக் கொடுத்து விடவா?' என்று நடைமுறை விளக்கம் கேட்டேன். நாங்கள் எழுதலாம். அப்படிச் செய்தால், இந்திய அரசோடு ஒத்துழையாமைக் கடைப்பிடிக்கிறோம் என்று நினைத்துவிடக் கூடாதென்று யோசிக்கிறேன்' என்று சொல்லிக் கொண்டு இருக்கையிலேயே, 'இன்னும் மூன்று திங்களில் என் ஈராண்டுப் பதவிக்காலம் முடிகிறது. அவ்வேளை, நான் சென்னைப் பதவிக்குத் திரும்பிச் செல்ல விரும்புவதாக எழுதிக் கொடுத்து விடுகிறேன்' என்றேன். மறுநாள் உழவர் எழுத்தறிவுத் திட்டத்திற்குத் தந்தி வழியாகத் தமிழக அரசின் இசைவு வந்தது. நான் ஒப்புக்கொண்டபடி, சில திங்களில் சென்னைப் பதவிக்குத் திரும்பினேன். என்னைத் தலைமைக் கல்வி ஆலோசகராகவும் கூடுதல் செயலாளராகவும் நியமித்த, முதல் அமைச்சர் அண்ணாதுரை அய்ந்நூறு எழுத்தறிவு மையங்களைத் தொடங்க நிதி ஒதுக்கினார்; அது நடைமுறையாவதற்கு முன் மறைந்து விட்டார். ஆயினும், அய்ந்நூறு எழுத்தறிவு மையங்கள் தொடங்கப்பட்டன. அவை நன்கு செயல்பட்டன. எதிர்பார்த்ததைவிட நல்ல தேர்ச்சி கிடைத்தது. அண்ணல் காந்தி அடிகள் இன்னும் சில ஆண்டு உயிர் வாழ்ந்திருந்தால் தீண்டாமை பெருமளவு தொலைந்திருக்கும்; மீனாட்சிபுரம் நடந்திருக்காது. அறிஞர் அண்ணா அறுபத்து ஒன்பதில் மறையாதிருந்தால் தமிழ்நாட்டில் எல்லோரும் எழுத்தறிவு பெற்றிருப்பார்கள். 107. என் இலட்சியம் என் இலட்சியம் பசு அசை போடுகிறது; பொழுது போக்கிற்காகவா? இல்லை, உடலில் உரம் ஏற்றிக் கொள்ள அது தேவை. பசுவின் வலிமையால், அதற்கு எவ்வளவு ஆதாயம் ? மற்றவர்களுக்கு எவ்வளவு பயன்? மற்றவர்களுக்கே அதிகப் பயன். பசுவிற்கு உயிர் வாழும் ஆதாயம். மக்களுக்குப் பால் கிடைக்கும் நன்மை. பிறருக்குப் பயன்படவே பசு உயிர் வாழ்கிறது; அவ்வப்போது அசை போட்டு உயிர் வாழ்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/743&oldid=787744" இலிருந்து மீள்விக்கப்பட்டது